செவ்வாய், 28 ஏப்ரல், 2009

மழை விட்டும் தூவானம் தொடர்வது....

நேற்று வெற்றிகரமாக ஜெயவர்த்தனே சமாதியில் நடந்து முடிந்த ராஜபக்சே உண்ணாவிரதத்தை உணர்ச்சிகரமாக வெளியிட்டிருந்தோம் . இன்று அதன் தொடர்ச்சி..

1/4 மணி நேர உண்ணாவிரதத்தில் முக்கால் வாசி உலகை மிரட்டிய ராஜபக்சே உண்ணாவிரத நோக்கம் நிறைவேறியதாக தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் BBC மற்றும் இலங்கை செய்தி நிறுவனங்கள் வேறு மாதிரி பொய் தகவல்கள் வெளியிட்டு ராஜபக்சே மேலுள்ள வெறுப்பை தீர்த்துக் கொண்டன..

அதே சமயம், திடீர் தமிழாதரவாளரான ரணிலின் மேடைப் பேச்சு அட்டகாசங்களும் எல்லை மீறி வருவதாக தமிழக செய்திகள் கட்டியம் கூறுகின்றன..

இந்நிலையில், நேற்றைய தனது கொடூர உண்ணாவிரதம் ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி ஈனத் தலைவர் தனது வழக்கமான பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்...

அதில், "எனது உண்ணாவிரதப் போராட்டம், எனக்கு முழு திருப்தியை அளித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்..

அதே சமயம், மழை விட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். அதைப் போலத்தான் இலங்கையில் இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும் எனவும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

இதுவரை இலங்கை இராணுவப் பேச்சாளர், இராணுவத் தளபதி, கோத்தபாய கூட தெரிவிக்காத கருத்தை ராஜபக்சே தெரிவித்துள்ளதால் அவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக நமது கொழும்பு நிருபர் தெரிவிக்கின்றார்..

இதே பாணியில் போனால், அங்கு இருக்கும் சொற்ப ஜனங்களும் சாக மறுப்பதினால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அவர்கள் திருப்பி தாக்காமல் அமைதியாக சாகும் பட்சத்தில் விமான பீரங்கிக் குண்டு சேதாரம் ஏற்படாது என ஈனத் தலைவரிடமிருந்து அடுத்த அறிக்கை வந்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..

இந்த நிலையில், ராஜபக்சே மற்றும் ரணிலின் அறிக்கை அட்டகாசம் தாங்காத மக்கள் தேர்தல் தேதியை முன்கூட்டியே வைக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை இன்று முதல் முற்றுகைப் போரட்டத்தின் மூலம் முடக்க போவதாக வந்துள்ள செய்திகளையடுத்து அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

ராஜபக்சே பக்தர்களிடம் ஒரு சின்ன சந்தேகம்... நீங்க எப்படியும் இதுக்கு ஒரு சப்பக்கட்டு கட்டி பதிவு போடப் போறீங்க.. அதைவிடுங்க.. இப்படியே போனால், உங்க ஈனத் தலைவர், அங்க போட்ட குண்டுகளினால் வந்த பொருளாதர இழப்பிற்கு ஈழத்தமிழர்கள் நஸ்ட ஈடு கொடுக்கனும்னு ஒரு அறிக்கை விட்டால் ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னும் இல்லை.. அதுக்கு தயார ஒரு பதிவு ரெடி பண்ணி draft'ல போட்டு வைச்சு இருக்கீங்களா?

ஏய்.. சைலன்ஸ்.. பேசிகிட்டு இருக்கோம்ல.. யாரு அது, தமிழ், இனமானம், மனிதம், உரிமை, திராவிடம்னு கூச்சல் போட்டுகிட்டு...

10 கருத்துகள்:

பதி சொன்னது…

படிக்கிறவங்க யாரும் இந்த செய்தியை படிச்சுடாதீங்க...

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+:+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF&artid=LZv9IcXhjmg=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SEO=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==


ஏன்னா, இந்த பதிவுக்கும் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...!!!!!

பெயரில்லா சொன்னது…

என்னய்யா நடக்குது?

பதி சொன்னது…

மன்னிக்கவும் ttpian,

ஆபாசமான கருத்துரைகளை அனுமதிக்க இயலாது...
புரிதலுக்கு நன்றி...

நாவேந்தன் சொன்னது…

அடுத்த சிங்கள ரத்னா முத்தமிழை வித்தவர் உலகத் தமிழ்த் துரோகி கருணாநிதி.

Suresh சொன்னது…

நல்ல பதிவு

பதி சொன்னது…

நண்பர்களின் வருகைக்கு நன்றி !!!

//pukalini
என்னய்யா நடக்குது?//

தெரிஞ்ச சொல்லவா மாட்டேன்... :(

எல்லாம் சரி, இது யாருக்காக எழுதப்பட்டது?

http://pukalini.wordpress.com/2009/04/24/நான்-கற்பில்லாதவனா/

படிச்சுட்டு தலை சுத்துது....

நாவேந்தன்... அந்த விருதுக்கு தமிழகத்தில கடும் போட்டி.. பாவம் கருணாவால அந்த அளவுக்கு முடியாது...

//Suresh
நல்ல பதிவு//

இது நல்ல பதிவெல்லாம் இல்லை.. நொந்த பதிவு...

பதி சொன்னது…

இதையெல்லாம் படிக்க வேண்டியதா இருக்கு

http://www.puthinam.com/full.php?2b1VoUe0dScYU0ecKA443b466DL4d3f1e3cc2AmS3d434OO2a030Mt3e

//இந்த நிலையில், ராஜபக்சே மற்றும் ரணிலின் அறிக்கை அட்டகாசம் தாங்காத மக்கள் தேர்தல் தேதியை முன்கூட்டியே வைக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை இன்று முதல் முற்றுகைப் போரட்டத்தின் மூலம் முடக்க போவதாக வந்துள்ள செய்திகளையடுத்து அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.//

இந்த மாதிரி ஏதாவது நடந்தா தான் தமிழகம் காப்பாற்றப்படும்னு தோனுது...

Kanna சொன்னது…

//ஏய்.. சைலன்ஸ்.. பேசிகிட்டு இருக்கோம்ல.. யாரு அது, தமிழ், இனமானம், மனிதம், உரிமை, திராவிடம்னு கூச்சல் போட்டுகிட்டு... //

இது நச்......

குறும்பன் சொன்னது…

இது மாதிரி நடந்தாலும் வியப்பதற்கில்லை :-((

இது நம்ம ஆளு சொன்னது…

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.