வியாழன், 23 ஏப்ரல், 2009

"இந்தி"யர் என்று பெருமிதம் கொள்வோம்....

"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்
சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்று
அகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்
காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்து
ஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில்

மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்.....

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
pukalini சொன்னது…

?

பெயரில்லா சொன்னது…

if you think you are just a tamil national, better surrender your passport and get a tamil passport if you can.

பெயரில்லா சொன்னது…

இந்தப்படங்களைப் பார்த்தும் கிண்டல் செய்யும் அனானிகள் இதய்மே இல்லாத மிருகங்கள். கட்டாயம் இந்த நாய்கள் பார்ப்பன்களாக அல்லது மலையாளிகளாக இருக்கவேண்டும்

பதி சொன்னது…

அனானி,

முதலில் ஒரு சந்தேகம்.. இந்த கேள்வியா நீங்க draft'ல போட்டு வைச்சுட்டு சுத்துறீங்களா?

"இந்தி"யா பற்றிய பல விவாதங்களில் இது போன்ற கேள்வியினை கண்டிருக்கின்றேன்...
http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

இது குறித்த மோகன் கந்தசாமியின் விளக்கத்தை நானும் draft'ல போட்டு வைத்துள்ளேன்...

//பாஸ்போர்ட் குறித்து இங்கே கொக்கரிக்கும் அனானிகளுக்கு,

பாஸ்போர்ட் என்பது ஒரு நாடு குடிமக்களுக்கு விதிக்கும் ஒரு கட்டுப்பாடு; சலுகை அல்ல. எல்லை தாண்டி பயணம் செய்ய எல்லாநாடுகளும் மக்களுக்கு இவ்வித கட்டுப்பாட்டை விதிக்கின்றன.

ஆங்காங்கே தேசிய கும்மியை அடித்துக்கொண்டிருக்கும் சிலதுகள் ஒருவரின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்யும் உரிமையை இந்திய அரசு தங்களிடம் கொடுத்திருப்பது போல் அலப்பறை செய்து கொண்டிருக்கின்றன. இந்தியா தேசிய இனங்களை பிரிந்து போக அனுமதித்து விட்டால் எல்லோரும் அவரவருக்குரிய தேசத்தில் தங்கள் கடவு பத்திரத்தை பெற்றுக்கொள்ளுவர்.

பிரிந்துபோக விரும்பிய தேசிய இனங்களை மோசடிகளாலும், பொய் வாக்குறுதிகளாலும், ராணுவத்தாலும், நயவஞ்சகத்தாலும் கட்டிவைத்து அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை மொத்தமாகவும் சிறுகச்சிறுகவும் சிதைக்கும் இந்தியா ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இந்திய கூட்டமைப்பின் விசாலமான விதிகளுக்கு உடன்பட்டே இனங்கள் இணைந்திருக்கின்றன. இந்தியர் அனைவரும் சட்டப்படி மட்டுமே இந்தியர்கள். உணர்வால் இணைவது என்பது இசைபட வாழும்போது மட்டுமே சாத்தியம். தேசியம் பேசும் முகவர்களைக்கொண்டு மக்களுக்கு தேசியத்தை ஊட்டமுடியாது. இதை தேசியவாதிகள் புரிந்தே உள்ளனர். ஆனால் இந்த அனானி தேசிய முகவர்கள் மற்றும் அவர்களின் அல்லக்கைகள் தொல்லைதான் தாங்க முடிவதில்லை.//

-L-L-D-a-s-u சொன்னது…

பெருமையில் உங்களோடு இணைகிறேன் :(

பதி சொன்னது…

//இந்தப்படங்களைப் பார்த்தும் கிண்டல் செய்யும் அனானிகள் இதய்மே இல்லாத மிருகங்கள். கட்டாயம் இந்த நாய்கள் பார்ப்பன்களாக அல்லது மலையாளிகளாக இருக்கவேண்டும்//

இது போன்ற ஏராளமான மனோவியாதி பீடித்தவர்களை இந்த இணையம் உற்பத்தி செய்துள்ளது நண்பரே... நான் மேற்குறிப்பிட்ட தமிழ்சசியின் பதிவுதளத்திற்கு சென்றால் நீங்கள் சிலவற்றைக் காணலாம்...

ஆறுமாச குழந்தை தலைல குண்டப் போடுறான், இதைக் கண்டிக்க மனிதன் என்ற "அடையாளம்' போதும்.

இந்த பிணந்திண்ணி நாட்டு வல்லரசுப் பெருமை பேசுபவர்களின் கொட்டம் என்று அடங்குமோ தெரியவில்லை... :(