திங்கள், 27 ஏப்ரல், 2009

போரை நிறுத்தக் கோரி ராஜபக்சே சோனியா உண்ணாவிரதம்

போர் நிறுத்தம் கோரி ஜெயவர்தனே சமாதியில் ராஜபச்சே உண்ணாவிரதம் !!

இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் சாதரண பொதுமக்கள் படும் அவதியை கண்டு மனம் நொந்த ராஜபக்சே தான் நடத்திய பந்த் நாடகம் வெற்றி பெறாததால் மனம் வெதும்பி போய் இன்று அதிகாலையில் ஜெயவர்தனே சமாதிக்கு தனிமையில் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்..

இச் செய்தியினை கேள்விப்பட்ட சோனியா உடனடியாக தனிவிமானம் மூலம் கொழும்பு விரந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார்... ஆனால், இவர்கள் யாரிடம் இந்த கோரிக்கையினை வைத்து உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர் என்பது அவர்களுக்காவது தெரியுமா என்பது சந்தேகமே..

சமீபத்திய ரணில்விக்கிரமசிங்கேயின் திடீர் தமிழ்காவலர் அடையாளத்தினாலும், நாடக மேடைப் பேச்சுக்களினாலும் கலவரப்பட்டு இன்று வரை பேதி புடுங்கிக் கொண்டிருந்த ராஜபக்ச கட்சியின் அடிப்பொடிகள் இன்று அதிகாலை முதலே தமிழினத்தைக் காக்க தங்கள் தலைவனை விட்டால் யாரும் இல்லையெனும் வழக்கமான பழைய மொக்கை கடையை பதிவுலகில் விரித்துள்ளனர்.

ராஜபக்சே சோனியா கூட்டணி உண்ணாவிரதத்தால் கதிகலங்கிப் போன இலங்கை இராணுவம் போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக அவர்களே அறிவித்துக் கொண்டு உண்ணாவிரத்ததை முடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன..

இதனிடையே சிலர் போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக கிளப்பிவிட்ட வதந்திக்கும் தமிழ் மக்களின் மேல் நடக்கும் இனவழிப்பு தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என தெரியவத்துள்ளனர்...

Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.

Sri Lanka army 'to stop shelling'

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8020048.stm


இதனால் ராஜபக்சே சோனியா கூட்டணி திரும்பவும் உண்ணாவிரதத்தை தொடருமா எனத் தெரியதா நிலையில் பதிவுலகில் அவர்களின் அல்லக்கைகளின் அட்டகாசம் எல்லை மீறி நடந்துகொண்டிருப்பதாக தமிழ்மணச் செய்திகள் குறிப்பிடுகின்றன...

*******************************************
ராஜபக்சே: இன்னமுமா இந்த ஊர் நம்பலை நம்புது?

அடிப்பொடி: அது அவங்க தலையெழுத்து மொதலாளி.. ஆனா, நீங்க உண்ணாவிரத்ததை இப்படி பாதியில முடிச்சு நம்ம டிவி கம்பெனி பொழப்புல மண்ண போடுவீங்கன்னு எதிர்பார்க்கலை...

*******************************************


6 கருத்துகள்:

பதி சொன்னது…

நேத்தைக்கு வரை சீன்'ல வராத ரணிலின் அதிரடி திடீர் மேடைப் பேச்சை அடுத்து எங்கே தான் இத்தனை காலமும் (உண்மையாலுமா???) கட்டிக்காத்த ஈனத் தலைவர் பதவி தன்னைவிட்டு போவிடுமே என்னும் அச்சத்திலே இது போன்ற கபட நாடகங்களில் ராஜபக்சே ஈடுபடுகிறார் என்பது அனவரும் அறிந்த ஒன்றே..

அப்படி இருக்க, இந்த 1/4 மணி நேர ஸ்டண்ட்ல் மயங்கி இத்தனை நாள் பின்னூட்டமிடக் கூட வரமால இருந்தோர் எல்லாம் இனி தமிழ், தமிழினம் பற்றி யாருக்கும் பேச தகுதியில்லை என அறிக்கவிட்ட பதிவுகளை பார்த்த கடுப்பில் 10 நிமிடத்தில் தயாரான சூப்பர் பாஸ்ட பதிவு இது !!

இது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அவர்கள் "ராஜபக்சே" டிவி பார்த்து மனதை ஆற்றிக் கொள்ளவும்..

பெயரில்லா சொன்னது…

உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் நடந்த உண்ணாவிரதம்

http://thatstamil.oneindia.in/news/2009/04/27/tn-thousands-of-dmk-cadres-gather-in-anna-samathi.html

ஏண்டா, உங்க இம்சைக்கு ஒரு அளவே இல்லையாடா?? அண்ணா, பெரியார் எல்லாம் இருந்திருந்தா தூக்குல தொங்குவாங்க உங்க பகுத்தறிவு வளர்ச்சியை பார்த்து....

Suresh Kumar சொன்னது…

மீண்டும் மீண்டும் நாடகம் நடத்தியே துரோகம் செய்கிறார் கருணாநிதி

பதி சொன்னது…

//Suresh Kumar சொன்னது…
மீண்டும் மீண்டும் நாடகம் நடத்தியே துரோகம் செய்கிறார் கருணாநிதி//

வாங்க சுரேஸ்... நீங்க பதிவு மாத்தி வந்துட்டீங்கன்னு நினைக்குறேன்.. இந்த பதிவு தமிழினத்தின் ஒரே காவலனும் ஈனத் தலைவனுமான ராஜபக்சேவின் உண்ணாவிரத அறப் போராட்டத்தைப் பற்றியது...

கருணாவின் நாடகத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதே சமயம், கருணா துரோகம் செய்வதாஉ இனிமேல் எங்கும் எழுத வேண்டாம்... அப்படி செய்யும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் தமிழ், தமிழினம் பற்றும் பேசும் தகுதியினை நீங்கள் இழக்க நேரிடும் என பெரியாரின் வழிவந்த இனமான உடன்பிறப்புகள் ஏற்கனவே அறிக்கைவெளியிட்டுள்ளனர்... கவனமாக இருக்கவும்...

பதி சொன்னது…

இதுல அமாவாசை & அமாவாசைக்கு அடுத்த நாளை ஒப்பிட்டு போடும் அட்டகாசம் தாங்க முடியலைடா சாமி...

:(

deesuresh சொன்னது…

ராஜ பக்சேவின் புகழ் ஓங்குக...!!

நாளை நீங்க சொன்ன மாதிரி அவர்கள் இறக்க மறுப்பதால் தான் கொல்லப் படுகிறார்கள். இது காலத்தின் கோலம். அப்படின்னு சொன்னாலும் சொல்லுவாரு அரசபஜ்ஜி(ராசபக்சே தாங்க)