வியாழன், 12 பிப்ரவரி, 2009

பிரான்சில் மேற்படிப்புத் தகவல்கள் !!!!!

வணக்கம்.....

மேற்படிப்பு (பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி துறை சார்ந்தவை) படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்குறிய சரியான தகவல்கள் உரிய நேரத்திற்க்கு கிடைக்கப்பெருமா என்பது சந்தேகமே... ஏனெனில், சரியான வாய்ப்புகளைத் தேடி சில ஆண்டுகளை கழித்தவர்களில் நானும் ஒருவன் !!!!! அதனால், நான் தற்போது இருக்கும் பிரான்சில், மேற்படிப்பு சம்பந்தமான தகவல்களை தமிழில் பதிய எண்ணிக்க்கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவரால், சுவீடனில் மேற்படிப்பு சம்பந்தமாக வினையூக்கி அவர்களால் இடப் பட்டிருந்த பதிவை காண நேர்ந்தது... அதனால் உந்தப் பட்டு, இங்கிருக்கும் பல்வேறு படிப்புகளைப் பற்றி என்னால் இயன்ற அளவிற்கு தகவல்கள் சேகரித்து இதை எழுத முயன்றுள்ளேன்....

பிரான்சில், சீதோசண நிலை ஒரு பெரும் பிரச்சனையா இருக்காது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமின்றி கலை மற்றும் மொழி சார்ந்த படிப்புகளுக்கும் பிரான்ஸ் புகழ் பெற்றது. இங்கு மேற்படிப்பு படிக்க, ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் (IELTS/TOEFL)சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது பாடத்திட்டதிற்கு ஏற்ப வேறுபடுகிறது. (பெரும்பான்மையான படிப்புகளுக்கு ஆங்கிலப் புலமைத் தேர்வு அவசியம் இல்லை !!!!).

பிரான்சில் 81க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரான்ஸ் அரசின் கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் இருப்பவையாகும்.

http://www.findaschool.org/index.php?Country=France

கல்விச் செலவுக்கான பெரும் பகுதியை அரசே ஏற்பதால், கட்டணத்தொகையானது மிகக் குறைவே, பெரும்பாலான சமயங்களில் முழுவதுமாக கல்விக் கட்டணம் கட்டத் தேவையிருக்காது. 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுத் தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த வயது வரம்பை கடந்தவர்களுக்கு இது இரண்டு ஆண்டிற்கு அதிகபட்சமாக 700 யூரோ வரை ஆகும். (பெரும்பாலும் இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து, கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டுத் தொகை 1000 யூரோ வரை ஆகலாம்). படிப்பு முடித்து இங்கேயே வேலை பார்க்க விரும்புவோர், பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்வது நன்மை தரும். அதே சமயம், மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை பெறதா மாணவர்களுக்கும் பிரெஞ்சு கற்றுக் கொள்வதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியாவில், Allience de Francaise என்னும் அமைப்பு பிரெஞ்சு மொழியினை கற்றுத்தருகிறது. பல்வேறு வகையான படிப்புகளையும் அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் தனித்தனியே பார்ப்போம்.

கல்வி உதவித்தொகை (Scholaships/Fellowships/Assistantship)

பொதுவாக, இந்த கல்வி உதவித்தொகை பற்றி பலருக்கும் இருக்கும் சந்தேகம்

மற்ற ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளைப் போலவே இங்கும் கல்வி உதவித் தொகையானது உங்களுடை கல்விச் செலவுக்கு மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட செலவுகளுக்கும் (உணவு, உடை, மருத்துவம், ஊர் சுற்றல்) போதுமானதாகவே இருக்கும். பகுதி நேர வேலைக்குச் சென்று பணம் ஈட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தொகையின் அளவானது படிப்பையும் (Masters/PhD), நாம் எந்த மாதிரியான உதவியின் கீழ் வருகின்றோம் என்பதனையும் பொறுத்து மாறுபடும்...

பொதுவாக PhD மாணவர்களுக்கு, 1300 - 1700 யூரோ வரை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். அனைத்து செலவுகளுக்கு பிறகும் பாதிக்கு மேல் சேமிக்கலாம்.

I பட்ட மேற்படிப்புத் தகவல்கள் (For Masters)

அ) இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமல்லாது முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் கூட, பிரான்சிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு வகையான படிப்புகளையும், அதன் வரையரைகளையும் விரிவாக தெரிந்து கொள்ள EduFrance என்னும் அமைப்பு உதவுகிறது. இது, Allience de Francaise ன் ஒரு அங்கமாகும். இவர்களின் இணைய முகவரிகள்

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

இந்த EduFrance அமைப்பானது இந்தியாவில் ஏழு இடங்களில் (சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், சண்டிகார், மும்பை, புது தில்லி, பூனே) அமைந்துள்ளது.

இவர்கள், பிரான்சின் கல்வி முறைகளைப் பற்றியும், அதற்கு விண்ணப்பிக்கும் முறைகளையும் மற்றும் கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கும் ஆலோசனை வழங்குவார்கள். இந்த அமைப்பினை, மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இவர்களின் மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளை தொடர்ந்து கவனித்து வரவும்.

ஆ) இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சில பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் பிரான்சில் உள்ள சில பல்கலைகழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன. [உதாரணம் : லயோலா கல்லூரியின் உயிர்த் தொழில் நுட்பத்துறையினர் (Biotechnology department, Loyala college) பிரான்சின் லில்லி பல்கலைக் கழகத்துடன் (University of Lille) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனர்]. அதேபோல, நீங்கள் இப்போது படித்துக் கொண்டுள்ள கல்வி நிறுவனம் இது போன்ற ஏதாவது ஒரு பிரான்ஸ் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் பட்சத்தில், உங்களுடைய பட்ட மேற்படிப்பின் ஒரு பகுதியையோ, 6 மாதப் படிப்பையோ அல்லது ஒரு ஆண்டு படிப்பையோ (உங்களுடைய படிப்பு 2 ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில்) பிரான்சில் உதவித்தொகையுடன் தொடரலாம்.

இ) ஒவ்வொரு ஆண்டும், பட்ட மேற்படிப்புக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

http://www.india-campusfrance.org/

www.edufrance.fr/en/

http://www.france-in-india.org/en/

http://www.egide.asso.fr/jahia/Jahia/

மற்றும், http://www.egide.asso.fr/jahia/Jahia/lang/en/accueil/etudiants

http://www.education.gouv.fr/cid1012/programme-erasmus.html

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=117&Itemid=47

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

http://www.irisa.fr/education/doctoral/teaching/

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.inserm.fr/en/inserm/

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும். அனைத்தும் ஒன்றுகொன்றுதொடர்பில்லாதது. அதே சமயம், ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களின் (இதே போன்ற) பட்ட மேற்படிப்புத் தகவல்களைப் பெற

http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

Masters in Materials Science

தற்சமயம், நான் இருக்கும் பல்கலைக் கழகத்தின் பருப்பொருள் அறிவியலில் துறையில் (Masters in Materials Science), கல்வி உதவித் தொகையுடன் கூடிய பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதற்கான தகவல்களைப் பெறவும்,

http://etudes.univ-rennes1.fr/mamaself/english

இதே துறையில் (Materials Science), ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் படிப்புத் தகவல்களை

http://www.getscholarship.net/79/erasmus-mundus-scholarships-for-european-master-in-material-science என்ற இணையத்தில் பெறலாம்.

Masters in Nano Science and Nanomaterials
http://etudes.univ-rennes1.fr/master-nanosciences/english

http://www.univ-lille1.fr/masters2-mnt-tac/mnt.htm


Materials for Energy Storage and Conservation (MESC)
http://www.u-picardie.fr/mundus_MESC/page.php?p=applications

இது ஒரு Erasmus Mundus கல்வி உதவித் தொகையின் கீழ்வரும் படிப்பாகும்.

Ampère excellence Scholarships - Master's programme
http://www.ens-lyon.eu/web/nav/article.php?id=23

AtoSiM Master of Science

http://www.erasmusmundus-atosim.cecam.org/

International masters in Chemistry at University of Rennes1

http://www.immc.univ-rennes1.fr/

II ஆராய்ச்சிப் படிப்புத் தகவல்கள் (PhD opportunities)

பொதுவாகவே, மற்ற வளர்ச்சியடைந்த ஐரோப்பியா நாடுகளைப் போலவே, பிரான்சிலும் ஆராய்ச்சி செய்யத்தேவையான சுதந்திரமும், வசதிகளும் மற்றும் வழிகாட்டுதலும் உள்ளது. ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி கவலைப் படத்தேவையில்லை.

அ) குறுகிய கால கல்வி உதவித் தொகை (Fellowship for PhD Sandwich programmes)

அயல்நாட்டு மாணவர்களுக்கு (ஏற்கனவே ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளோருக்கு), பிரான்ஸ் அதன் தூதரகங்களின் மூலம் இந்த திட்டத்திற்கான மாணவர்களை தேர்வுசெய்கின்றது. இதன் மூலம் தேர்வு செய்யப் படும் மாணவர்களுக்கு பயணம், கல்விக் கட்டணம் + மருத்துவக் காப்பீட்டு தொகை வழங்குவதோடு மற்றும் இதர செலவீனங்களுக்கு தேவையான மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இது 6 மாததிலிருந்து 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

இதற்கான தகவல்களை, http://www.frenchsciencetoday.org/ என்னும் இணையதளைத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். மற்றும்

http://www.ifan.in/index.php?option=com_content&task=view&id=68&Itemid=49

http://www.france-in-india.org/en/article.php3?id_article=3774

போன்ற இணைய தளங்களில் இந்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன.

கணிணி மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு

http://www.inria.fr/travailler/stage/index.en.html

http://www.inria.fr/recherche/equipes/listes/index.en.html

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை, நீங்கள் இப்போது ஆராய்சி செய்து கொண்டிருக்கும் ஆய்வகத்தின் நிர்வாகிக்கு (பேராசிரியர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் !!!!) அறிவித்துவிட்டு, பிரான்சில், நீங்கள் ஆராய்சி செய்துகொண்டிருக்கும் துறையில் ஒரு பேராசிரியரை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வது தான். பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களை நீங்கள், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் தேடலாம்.

தேவையானவை: இதற்கு நீங்கள் முதலில் ஒரு சுயவிவரத்தை (CV) தயார் செய்து கொள்ளவும், அதில் நீங்கள் உங்களைப் பற்றிய விபரங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடவும். அதனை உங்கள் மின்னஞ்சலில் இணைத்து, நீங்கள் தொடர்பு கொள்ளும் பேராசிரியருக்கு அனுப்பவும்.

ஐரோப்பாவிலிருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களிலிருக்கும் தகவல்கள்

http://cordis.europa.eu/fp6/mobility.htm

http://ec.europa.eu/euraxess/index_en.cfm

ஆ ) மூன்றாண்டுகளுக்கான உதவித்தொகை (Full time PhD fellowships)

பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், முடித்துவிட்டு பணியிலிருப்பவர்கள் என ஆர்வமும் விருப்பமும் இருக்கும் யாவரும், பிரான்சில் மூன்றாண்டுகளுக்கு மேல் கால அவகாசம் எடுக்கும், முழு நேர ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, ஆராய்சி செய்ய போதுமான நிதி வசதி, நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது அரசின் கல்வி அமைச்சிலிருந்து நிதி பெறுவதாக இருந்தால் தான் இவர்கள் மாணவர்களை எடுப்பதால், பெரும்பாலும் கல்வி உதவித் தொகை பற்றி பொதுவாக கவலைப் படத்தேவையில்லை.

இதற்கான தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது சற்றே சிரமம் தான். ஆனால், சிறிது முயற்சித்தால், தேவையான தகவல்களை எளிதில் பெறலாம். உங்களுக்கு, ஆய்வுக் கட்டுரைகளின் மூலமும், கருத்தரங்குகள், நண்பர்கள் வழியாகவும், உங்களுக்கு விருப்பமான துறையில் ஏதேனும் பேரசிரியர்கள் மற்றும் அவர்களின் ஆய்வகங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அவர்களை தொடர்பு கொள்வது எளிது. அப்படி இல்லாவிடினும், http://www.findaschool.org/index.php?Country=France என்னும் வலைத்தளத்தின் உதவியுடன் பிரான்சில் இருக்கும் அனைத்துப் பல்கலை மற்றும் ஆய்வு நிறுவனங்களையும் தேடலாம்.

பேராசிரியர்களை உங்கள் சுயவிவரத்துடன் (CV) மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதே மிகச் சிறந்த வழி. அதே சமயம், இப்படிப்பிற்கான விளம்பரங்களையும், தகவல்களையும் நீங்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

www.abg.asso.fr

http://www.cnrs.fr/en/join/Grants-Fellowships.htm

http://www.francecontact.net/

http://www.scholarshipnet.info/

http://www.findaphd.com/

http://france-in-india.org/en/

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

http://www.inria.fr/travailler/jeunes_chercheurs/index.en.html

http://www.irisa.fr/education/subjects/index_html?set_language=en

http://www.iarc.fr/en/Education-Training/Fellowships

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/join_us/inra_is_recruiting_19_phd_students_on_special_contracts

உயிரியல், மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் (biological, medical and public health research) போன்ற துறை சார் படிப்புகளுக்கு

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono//offres_en.htm

அனைத்து இணைப்புகளுக்கும் சென்று பார்க்கவும், ஏனெனில், அனைத்தும் ஒன்றுகொன்று தொடர்பில்லாதது. பெரும்பாலும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு (PhD Studies) குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல், ஆண்டின் அனைத்து காலங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

III விஞ்ஞானிகளுக்கு (for post-doc & scientists)

அயல் நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கும் அவர்களது குழுவினருக்கும், குறுகிய காலம் (6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை), பிரான்சில் ஆராய்சிப் பணிகளைத் தொடரவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும், கீழ்கண்ட இணையதளங்களில் தகவல்கள் உள்ளன.

http://www.cnrs.fr/en/join/Postdoctoral.htm

http://www.cefipra.org/cefipra/IPR.htm

http://www.stic-dst.org/download/networkcall.htm

http://www.francecontact.net/

http://www.pasteurfoundation.org/PostDoct.html

http://www.iarc.fr/en/Vacancies/Postdoctoral-Opportunities

கணிணி, கணிதவியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு (Applied Mathematics, Computation, Simulation Algorithmics, Programming, Software, Architecture, Networks, Systems, Services, Distributed Computing, Perception, Cognition, Interaction, Computational Sciences for Biology, Medicine and the Environment)

http://www.inria.fr/travailler/opportunites/doc.en.html

உயிரித் தொழில் நுட்பம், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைசார்ந்தவர்களுக்கு,

http://www.international.inra.fr/

http://www.cemagref.fr/English/

Materials Science

http://iemn.univ-lille1.fr/cnanono/offres_en.htm


இது, இத்தொடரினை எழுத ஊக்கமாக இருந்த பதிவு......... :)

http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html


பின்குறிப்பு : சில இணைப்புகளுக்கு மட்டும் அந்தப் விண்ணப்பத்திற்கான கடைசி தேதியினை குறிப்பிட்டுள்ளேன் ஏதேனும் இணைப்புகள் வேலை செய்யாவிடின் சுட்டிக்காட்டவும். :)


20 கருத்துகள்:

பதி சொன்னது…

இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த நண்பர்கள் சாந்தகுமார் மற்றும் இரஞ்சித்க்கு நன்றி !!!!

SK சொன்னது…

அருமையான பதிவு பதி.

வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருந்த சில விடயங்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள் பதிவுகளை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

migavum payanullathu .. nanrikal pala

பதி சொன்னது…

நன்றி SK மற்றும் அனானி...

பதி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு.

மிகவும் நன்றி.

கையேடு சொன்னது…

வாழ்த்துக்கள் பதி தொடருங்கள்.. :))

பெயரில்லா சொன்னது…

Really Useful Info, thanks for sharing!. I had further shared with my friends by forwarding your link

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தங்கள் பதிவு பற்றி ஒரு சொல்லும் சொல்லாமல் விட்டு விட்டேன். ஏனெனில் என் நிலை "கழுதை-கர்பூரம் என்றானது படிப்பு..பாற்கடல் மீன் போல் ..;இங்கிருந்து பயன் படுத்தத் தவறியவன் நான்.
உங்கள் ஊக்கம்,தேடல் அதைப் பகிர்தல் ;அனைவருகும் ஆக்கம் தரும்.
மிகுந்த பாராட்டுகள்.
மற்ற பதிவில் படங்கள் பார்த்தேன். சென்மாலோ St Malo சென்றுள்ளீர்கள். அப்படியே St.Tropezசென் துறப்பே; நீஸ்- Nice; மொனக்கோ- Monaco , இத்தாலி கூடச் செல்லலாம். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்

பதி சொன்னது…

மஞ்சூர் ராசா, கையேடு, gajananan

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

//கையேடு சொன்னது…

வாழ்த்துக்கள் பதி தொடருங்கள்.. :))//

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் !!!!!! :)

பதி சொன்னது…

திரு யோகன் பாரீஸ்,

//தங்கள் பதிவு பற்றி ஒரு சொல்லும் சொல்லாமல் விட்டு விட்டேன். ஏனெனில் என் நிலை "கழுதை-கர்பூரம் என்றானது படிப்பு..பாற்கடல் மீன் போல் ..;இங்கிருந்து பயன் படுத்தத் தவறியவன் நான்.//

நீங்கள் சொல்ல வருவதன் பொருள் புரிகின்றது. ஆனலும் இதற்கு என்ன பதிலளிப்பதென தெரியவில்ல. அடுத்த தலைமுறையிலாவது இது மாறும் என நம்புவோம்... வேறென்ன சொல்ல??

//உங்கள் ஊக்கம்,தேடல் அதைப் பகிர்தல் ;அனைவருகும் ஆக்கம் தரும். மிகுந்த பாராட்டுகள்.//

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி...

//அப்படியே St.Tropezசென் துறப்பே; நீஸ்- Nice; மொனக்கோ- Monaco , இத்தாலி கூடச் செல்லலாம். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்//

ம்ம்ம்... இவை அனைத்தும் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளது... ஊர் சுற்றல்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது.... :)

saran சொன்னது…

ungal aakkam matravarkalukku ukkam,
nanri thiru pathikumar avargale,

ithu neengal thimizh mel vaithulla patraiyum, thamizh makkalin mel vaithulla patraiyum, parai satruvathu pol ullathu...

ungalin thamizh pani thodara en vazhthugal...

nanri,
saravanan

பதி சொன்னது…

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சரவணன், செந்தழல் ரவி.... :)

Kulapam சொன்னது…

பயன்னுள்ளத் தகவல்கள்....

வினையூக்கி சொன்னது…

Merci Beacoup

வினையூக்கி சொன்னது…

Merci Beaucoup

பதி சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி குழப்பம் மற்றும் வினையூக்கி.

இடுகையினை புதிய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டி இருந்த காரணத்தினால் பதிலளிக்க தாமதமாகிவிட்டது. :)

கையேடு சொன்னது…

//இதே தளத்திலேயே இனிவரும் காலங்களிலும் புதுத் தகவல்களை பதிக்கவுள்ளதால், ஒவ்வொருமுறை தகவல்களை பதிந்தவுடன் நானே ஒரு பின்னூட்டமும் இட்டு விடுகிறேன். :)//

இது சிறந்த வழியில்லை பதி.. பரிசீலிக்கவும்.
ஒவ்வொரு முறையும் புதுப்புது இடுகையிடுங்கள் பழைய இடுகையின் தொடுப்பையும் கொடுத்துவிடுங்கள்.
இல்லையெனில் நீங்கள் எதனைப் புதிதாகச் சேர்த்தீர்கள் என்பதே அறியாமல் போய்விடும்.

பரிசீலிக்கவும்.. :)

Unknown சொன்னது…

vry use full info
thank u vry much