புலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் - செய்தி
இது போன்ற தாக்குதல்களினால் வரும் உற்சாகத்தில் அங்கு அவலத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலமையை மறந்துவிடக் கூடாது.. அதனால் தான் புலிகளே கடந்த 2 மாத காலமாக தங்களது கள நிலைமையை அடக்கி வாசித்தனர்....
இந்த 2009ம் ஆண்டு துவக்கத்திலிருந்து மட்டும் சிங்களம் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை எத்தனை?? அதற்காக துவக்கப்பட்ட இழைகள் எத்தனை? இங்கு பாருங்கள் அரை மணி நேரத்தில் எத்தனை இடுகைகள்??????? !!!!
தமிழா..... உணர்ச்சிவசப்பட உன்னை விட்டால் இந்த உலகத்தில் ஆளே இல்லை !!!!
வெள்ளி, 20 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
இந்த சமயத்தில் உலகம் முழுதுமுள்ள தமிழர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியையும், போரட்ட குணத்தையும் குறைக்கும் வகையில் நமது நிகழ்வுகள்(பதிவுகள்) அமைந்துவிடக் கூடாது என எண்ணியதாலே இந்த இடுகை.
உணர்ச்சிவசப்பட எதுவுமில்லை. நடந்த தோல்வியை இட்டு தமிழர்கள் துவண்டு போகக்கூடாது.
போரில் தாக்குதல்கள் பிழைத்துப்போவது சகஜம்.
இரண்டு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி இன்னமும் உலகத்தமிழர்களுக்கு துல்லியமாகச் சொல்லப்படவில்லை.
விமானங்கள் வீழ்வதும் நிலங்கள் பறிபோவதும் தோல்வியல்ல. எமது அரசியற் கோரிக்கையை வென்றெடுக்கும்போது கிடைக்கும் வெற்றியே நிரந்தரமானது நிலையானது.
கொழும்பில் புலிகளின் விமானம் இறைவரித்திணைக்களக் கட்டடத்தின் மீது நொருங்கி வீழ்ந்ததை கண்ணால் பார்த்த தமிழர்கள், மற்றும் தலை நகர் வாழ் தமிழர்கள் மிகவும் இறுகிய மனநிலையை அடைந்திருப்பதுடன் துவண்டும் போயுள்ளனர்.
எதுவும் உலகம் பூராக நிகழும் தமிழின உரிமைப்போராட்டங்களை தடுத்துவிடகூடாது.
அவை இன்னமும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படவேண்டும்.
பதி உங்களோடு நானும் ஒத்துப் பொகிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி மற்றும் தமிழ்பித்தன்...
அனானி,
//இரண்டு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி இன்னமும் உலகத்தமிழர்களுக்கு துல்லியமாகச் சொல்லப்படவில்லை. //
இத்தகவலும் புதிதே... எது எப்படி இருப்பினும் புலிகள் அறிவிப்பர். BBC, CNN போன்ற சில ஊடகங்கள் இல்லையெனில் இச்செய்தியையும் சிங்களம் வெளியிட்டிருக்குமா என்பது சந்தேகமே..
நிற்க...
//கொழும்பில் புலிகளின் விமானம் இறைவரித்திணைக்களக் கட்டடத்தின் மீது நொருங்கி வீழ்ந்ததை கண்ணால் பார்த்த தமிழர்கள், மற்றும் தலை நகர் வாழ் தமிழர்கள் மிகவும் இறுகிய மனநிலையை அடைந்திருப்பதுடன் துவண்டும் போயுள்ளனர்.//
அரசாங்கம் பரப்பும் எந்தவிதமான செய்திகளையும் சிங்களவர்களே நம்புவார்களா என்பது ஆராயப்பட வேண்டியது !!! ஏனெனில் நேற்று தான் அவர்கள் புலிகளின் எரிந்த விமானங்களை வெளியிட்டனர்..
//விமானங்கள் வீழ்வதும் நிலங்கள் பறிபோவதும் தோல்வியல்ல. எமது அரசியற் கோரிக்கையை வென்றெடுக்கும்போது கிடைக்கும் வெற்றியே நிரந்தரமானது நிலையானது.
.
.
எதுவும் உலகம் பூராக நிகழும் தமிழின உரிமைப்போராட்டங்களை தடுத்துவிடகூடாது.
அவை இன்னமும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படவேண்டும்.//
இதுவே எனது கருத்தும் ஆகும்...
இன்று கொழும்பில் சுட்டுவீழ்த்தப்பட்ட இரு தமிழீழ தேசிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களின் உடைந்த பாகங்களை இங்கே படங்களில் காணலாம்.
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=41258
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அனானி. நீங்கள் தான் முதலில் வந்த அனானியா என தெரியவில்லை. !!!
நான் ஏற்கனவே,//எது எப்படி இருப்பினும் புலிகள் அறிவிப்பர்// என்று கூறியது போல, நிகழ்ந்தது ஒரு கரும்புலித் தாக்குதல் என புலிகள் அறிவித்துள்ளனர்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28478
ஏற்கனவே இங்கு ஒரு அனானி வழியுருத்தியிருந்த கருத்தை மீண்டும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..
//விமானங்கள் வீழ்வதும் நிலங்கள் பறிபோவதும் தோல்வியல்ல. எமது அரசியற் கோரிக்கையை வென்றெடுக்கும்போது கிடைக்கும் வெற்றியே நிரந்தரமானது நிலையானது.
.
.
எதுவும் உலகம் பூராக நிகழும் தமிழின உரிமைப்போராட்டங்களை தடுத்துவிடகூடாது.
அவை இன்னமும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படவேண்டும்.//
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான
கேணல் ரூபன்
லெப்.கேணல் சிரித்திரன்
ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக