ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

முதல் வணக்கம் !!!!!!!

வணக்கம் நண்பர்களே,

தமிழ் இணைய உலகில் எனது இந்தப் பக்கத்தையும் இணைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்...

தமிழ் மணத்தின் மூலமும் மற்ற திரட்டிகளின் மூலமும் கடந்த 4 ஆண்டிற்கும் மேலாக  பலருடைய பதிவுகளைப் படித்து வந்தாலும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்கு மேல் பின்னூட்டம் எதனையும் இட்டதில்லை (அதற்கு முக்கிய காரணம் orkutல் அதிக நேரம் சேவையாற்றியது தான்!!!!)... :)

சில அவசியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், பின்னூட்டக் கும்மிகளில் கலந்து கொள்ளவும் ஒரு பதிவுப் பக்கம் தேவையென்பதால் இந்த வலைப்பக்கம்... அவ்வளவே... ஆகையால், தமிழ் இணைய உலகிற்கு என்னால் எந்த பாதிப்பும் வராது என என்னை இணைய தமிழிற்கு அறிமுகம் செய்து வைத்த தங்கமணி, முனியாண்டி, பாலாஜி, இரஞ்சித் வகையறாக்களுக்கு நான் இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்.... :) (இதில் முதல் மூன்று நபர்களும் IISc tea board'ல் பதிவுலகத்தைப் பற்றி பேசும் போது ஆ'வென வேடிக்கை பார்த்த ஆரம்ப நாட்கள் நினைவில் வருகின்றன)... ஆனால், ஆரம்ப காலங்களில் இவர்களில் எவரும் தன்னுடைய படைப்புகளை என்னை படிக்க சொல்லி இன்புறுத்தவில்லை (இது துன்புறுத்தலின் எதிர்பதமாக கொள்ளலாம்)... தங்கமணி எடுத்துக் கொடுத்து நான் படித்த முதல் பதிவு, மனவோசை...

நிறங்கள், தேன்துளி, சசியின் டைரி, செல்வராஜ், வளவு, இளவேனில், சுந்தரவடிவேல், DISPASSIONATED DJ மற்றும் கனவுகளின் தொலைவு போன்ற 50க்கும் மேற்பட்ட பதிவுகளை google reader ன் உதவியுடன் நேரம் கிடைக்கும் போது வாசித்துவிடுவேன்... வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களை அறிமுகப் படுத்திய லிவிங் ஸ்மைல்ன் பதிவுகளை இதில் குறிப்பிட்டுச்  சொல்லலாம்..

இப்படி பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகில், தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் ஏதெனும் சில சமயங்களில் கருத்துப் பரிமாற்றத்திற்கும் இந்த பதிவுப் பக்கம் பயன்படுமென நம்புகின்றேன்....

நன்றி.....  :)

3 கருத்துகள்:

nt சொன்னது…

வாப்பா வா!

கையேடு சொன்னது…

வாங்க பதி வந்து பதிவுலகத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சீட்டிங்க.. வாழ்த்துக்கள்.. :)

பதி சொன்னது…

:)