திங்கள், 12 அக்டோபர், 2009

தினமணியின் இந்திய-இலங்கை நட்புறவுக்கெதிரான செயல்

ஏற்கனவே பிண்ணிப் பிணைந்துள்ள இந்திய - இலங்கை உறவு தற்பொழுது மேலும் வளர்வதை பொறுக்காத தினமணியின் சதிச்செயல் பார்த்தாயா உடன்பிறப்பே???


நமது மீனவர்கள் தாக்கப்படுவது என்ன புதுத் தகவலா நமக்கு?? அதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர் இரு நாட்டு உறவு குறித்து பேசிய அதே தினத்தில் வெளியிடும் தினமணியின் உள்நோக்கம் என்ன?உடனடியாய் தலையிட்டு தீர்வு காண அது என்ன சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமா உடன்பிறப்பே??
ஹார்வார்ட் தந்த சிந்தனைச் செம்மல் என்ன செப்பியிருக்கின்றார் என கவனித்தாயா?? "Union Home Minister P Chidambaram on Friday dismissed as wrong reports about firing on Indian fishermen by Sri Lankan Navy in the last 10 months but said cases of some excesses by them have been taken up"

உண்மை நிலை இப்படி இருக்க தினமணிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை???

ம்ம்ம்ம்ம்ம்

சரி...

வாழ்க இலங்கை-இந்திய நல்லுறவு!!



3 கருத்துகள்:

தங்கமணி சொன்னது…

பசி பொய் சொல்கிறாரோ என்று யாரும் எண்ணி விடக்கூடாது. அவர் இலங்கை இராணுவம் துப்பாக்கியால்தான் சுடவில்லை என்ற உண்மையையே கூறியுள்ளார். அரிவாளால் வெட்டிக்கொல்லுதல், கயிறால், கட்டையால் அடிப்பது போன்ற மிதவாத முறைகளில் நடவடிக்கை எடுப்பதை குற்றமாகக் கொள்ளமுடியாதல்லவா?

வாழ்க இந்தியா!!

பதி சொன்னது…

வாங்க NT,

//அவர் இலங்கை இராணுவம் துப்பாக்கியால்தான் சுடவில்லை என்ற உண்மையையே கூறியுள்ளார்.//

ம்ம்ம்ம்.. என்ன செய்வது? முன்பாவது விடுதலைப் புலிகள் தாக்குகின்றனர் என புழுகித் திரியவாவது ஒரு வாய்ப்பு இருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை அல்லவா.

//அரிவாளால் வெட்டிக்கொல்லுதல், கயிறால், கட்டையால் அடிப்பது போன்ற மிதவாத முறைகளில் நடவடிக்கை எடுப்பதை குற்றமாகக் கொள்ளமுடியாதல்லவா?//

கூடவே இந்திய இராணுவத்திடம் பெற்ற பயிற்சியினைக் கொண்டு ஆடைகளை நீக்கி அம்மணமாக்கி அனுப்புவது போன்றதையும் சேர்த்துக் கொள்ளலாம்...

பார்க்க,
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0808/25/1080825005_1.htm

மீனவர்களுக்கு நிதி திரட்ட ஒரு நாடகம் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

//வாழ்க இந்தியா!//

ஓ, அது வாழ்க இலங்கை-இந்திய நல்லுறவு'னு இல்லை இருக்கனும்???

மதிபாலா சொன்னது…

//வாழ்க இந்தியா!//

வாழ்க...வாழ்க இந்தியா...