http://www.youtube.com/watch?v=OVReet6b2ks
இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.
ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.
ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.
இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...
2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.
மற்றபடி
வாழ்க (வல்லரசு) இந்தியா...
10 கருத்துகள்:
இந்தியா வாழ்க!!
இதுபோல் எவ்வளவோ கொடுமைகள்
தினமும் நடக்கின்றது. ஆனால் யாருக்கு அதைப்பற்றிக் கவலை.
இலங்கையில் புலிகளை அழித்ததுபோல் இந்தியாவில் நக்ஸலைட் பிரச்சினையை ஒழித்துவிடலாம் என நினைக்கும் இந்தியா தனது தலையில், இல்லை.....இல்லை தனது புதைகுழியை தானே தோண்டுகிறது.
விதைத்தது முளைக்கத்தானே செய்யும். சில விதைகள் உடனே முளைக்கும் சில விதைகள் சற்று காலம் தாழ்த்தி முளைக்கும்.
ஆனால் விதைகள் கட்டாயம் முளைக்கும்.
வருகைக்கும் உணர்வுகளுக்கும் நன்றி மாயாவி.
இதனை போன்ற கொடூரங்களை என்ன சொல்வதென்றே புரியவில்லை.
ஒரு கும்பல் இப்படி சில இளைஞர்களை அடித்தும் பெண்களை மானபங்கப் படுத்தியும் திரியும் பொழுது, பெரும்பான்மை கும்பல் வேடிக்கை பார்க்கும் அயோக்கியத்தனைத்தை என்னவென சொல்ல? புகைப்படம் எடுப்பவர்கள், காவல் துறை என ஒருவரும் தடுத்த மாதிரி கூட தெரியவில்லை.
கும்பல் மனப்பான்மை, பெரும்பான்மை சமூகத்தின் அமைதி என்பதையும் தாண்டி, அடிப்படையிலே கோளாரான ஜந்துக்களை பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்கு அந்த வீடியோவைப் பார்க்கும் பொழுது ஏற்பட்டது.
இது போன்ற வக்கிரங்களை மிருகங்கள் என்று கூட குறிப்பிட முடியாது, ஏனெனில் எந்த ஒரு மிருகமும் சக மிருகத்தை இரைக்காக வேட்டையாடுவதைத் தவிர்த்து இன, மொழி, சாதி, சமய அடிப்படையில் சித்திரவதை செய்து கொன்றதாக நான் கேள்விப் பட்டதில்லை.
வணக்கம் பதி
இன்னும் இந்த தேசத்தை நேசிப்பது நிச்சயம் மிகப்பெரிய குற்றம்.
அந்த காமன் மேன் இதற்கு முன்பே இவரின் மற்றொரு படத்தில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கார்
"குருதிப்புனல்" அதில் நாசர் சார்ந்து இருக்கும் கொள்கைள் குறித்து எந்த முகாந்திரமும் இருக்காது.
அவர் நாசரிடம் கூறும் வார்த்தைகள் மட்டும் பொதும் "நீ பேசுர எதையும் இங்க யாறும் கேட்க மாட்டாங்க, ஆனா அரசாங்கம் பேசினா எல்லாருக்கும் கேட்கும்."
"சினிமா பார்த்துட்டு திடமான கொள்கை இல்லாதவங்கதான் இங்க இருக்கின்றவர்கள்"
இது இரண்டும் போதும்
இராஜராஜன்
பதி, அதிர்ச்சியாக இல்லை. ஈழக்கொடுமைகளை பார்த்துப்பழகிய கண்களுக்கு இந்தியா இப்படியான கொடுமைகளை செய்திருப்பது அதிர்ச்சியாக இல்லை.
இந்தப்பதிவில் சில தவறுகள் இருக்கின்றன.
1. ஆதிவாசி என்ற பதம் தவறு. வனவாசி என்ற பதமே பாரத தேசத்தில் பயன்படுத்தப்படவேண்டும். (அப்போதுதான் ஆதிவாசி/ குடியேறி என்ற உண்மை மறையும்)
2. அப்புறம் இந்த தாக்குதல்கள் அவர்கள் தங்கள் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கத்தான்.
3. பெரும்பாலான தாக்குதல்காரர்கள் கால்களை முறிப்பதிலும் கைகளை சிதைப்பதிலும் ஈடுபட்டார்கள். மரணகாயம் விளைவிப்பதை கடுமையாக தவிர்த்திருப்பது இந்திய மக்களின் உள்ளே என்றென்றும் இருக்கும் பேரன்பையே காட்டுகிறது. இல்லாவிடில் இந்த சூழலில் எவ்வளவு இறப்பு நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்
வாழ்க இந்தியா. நீடுழி வாழ்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜன் & NT.
இராஜராஜன், நான் அந்த ஒரு "காமன் மேனை" மட்டும் சுட்டவில்லை. பிரச்சனையின் மூலத்தை அறியவிரும்பால் அல்லது அறியாமல் தீர்வுகளை அள்ளித் தெளித்துச் செல்லும் பல பொதுப்புத்தி "காமன் மேன்களையும்" சேர்த்தே சுட்டினேன்.
NT,
//ஈழக்கொடுமைகளை பார்த்துப்பழகிய கண்களுக்கு இந்தியா இப்படியான கொடுமைகளை செய்திருப்பது அதிர்ச்சியாக இல்லை//
உண்மை தான். ஆயினும், வீடியோவில் காணும் போது நிகழ்வின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதைவிட கொடூரமாக மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17பேர் (அரசின் கணக்குப் படி) தாமிரபரணியாற்றில் அடித்துக் கொன்று வீசப்பட்டனர் சென்ற திமுக (முத்தமிழையும் விற்றவரின்) ஆட்சியில். அந்த நிகழ்வுக்கும் இதற்கும் உள்ள பெரிய வித்தியாசம், வீடியோ ஆதாரம். அவ்வளவே.
மற்றபடி, நீங்கள் சுட்டிகாட்டிய தவறுகளை அறியாமையில் உள்ள மக்களிடமிருந்து களையத் தான் தேசியவியாதி பத்திரிக்கைகள் நம்மிடம் ஏராளம் உள்ளன.
//ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.//
காமன் மேன்கள் கரப்பான்பூச்சிகளைக் கண்டுபிடுத்து அழிப்பதில் பிசியாக இருப்பதால், இது புரிவதில்லை/தெரிவதில்லை..
ஏற்கனவே சொன்னதுதான்.. காணொளியை முழுதாகப் பார்க்க முடியவில்லை..
இப்படியெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று நம்பிக்கொண்டிருந்ததை இந்தியா அசாம் சம்பவம் முறியடித்துப் போட்டுவிட்டது.
வாழ்க ஏக இந்தியா! வாழ்க பாரதநாடு!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கையேடு மற்றும் சுப.நற்குணன்...
இந்த இடுகையின் தலைப்பைக் கூட மாற்றாமல் அப்படியே சுட்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் உங்களால் கவனித்து இருக்க முடியாது. விரைவில் பிரபல பதிவர் ஆகிவிடுவீர்கள்.
உங்கள் விவரிப்பை படித்துவிட்டு, படத்தை பார்க்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். பார்க்காவிட்டால் இவர்கள் இவ்வளவு கொடியவர்கள் என்று கற்பனையில் கூட நினைக்க முடியாது. வாழ்க புண்ணிய பூமி.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலவுசனப்பிரியன்..
இதைவிட பன்மடங்கு கொடூரங்கள் நிகழ்ந்த போதிலும், இது காட்சிப் பதிவாக உள்ளதால் அதன் கோரம் நம்மைத் தாக்குகின்றது.
//இந்த இடுகையின் தலைப்பைக் கூட மாற்றாமல் அப்படியே சுட்டு இருக்கிறார்கள். //
ஆம். இது தொடர்பாக மனிதன் குழுவினருக்கு மடல் எழுதியுள்ளேன்.
http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1268954207&archive=&start_from=&ucat=1&
கருத்துரையிடுக