வியாழன், 26 மார்ச், 2009

இந்தியாவுக்கு குறைந்த செலவில் தொலைபேசனுமா?

வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் பெரும்பான்மையான நேரத்தையும், தாரளமாக காசையும் செலவு செய்வது நம்ம ஊருக்கு தொலைபேசவே.

நண்பர்கள் சிலர் சொன்னதாலும் பதிவுலகில் யாரோ எழுதியிருந்ததாலும், சில தனியார் நிறுவனங்களின் voip வசதியை பயன்படுத்த முடிவெடுத்தேன். Freecall என்னும் சேவை வசதி சற்றே தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதாக கருதி அதில் ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் நம்ம ஊருக்கும், வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்களுடனும் மணிக்கணக்கில் பேசிவந்தேன்.

இந்த சேவை ஒழுங்காக இயங்கும் பொழுது, இச்சேவையை வழங்கும் நிறுவனத்தைப் பற்றியோ அல்லது அவர்களின் நம்பகத்தன்மை பற்றியோ சந்தேகமே வந்ததில்லை. (எங்க, நமக்கு தான் மணிக்கணக்குல போன் பேச இல்லாட்டி பிளாக், ஓர்குட்'ல ஆராய்ச்சி பண்ணவே நேரம் இல்லையே !!!)

ஒரு சில மாதங்களுக்கு முன்பு கடன் அட்டை வழியாக பணம் செலுத்தும் வசதி நின்றபொழுதும் எதுவும் உறைக்கவில்லை (போன் பேசுற மப்பு !!!). வழக்கமான முறையில் வங்கி வழியாக பணம் செலுத்தும் முறையில் பணத்தை அனுப்பி விட்டு, இதே முறையை பின்பற்றும் படி பல நண்பர்களும் பரிந்துரைத்தேன். ஒரு இனிய மாலைப் பொழுதில் வேலை செய்யுறது சுத்தமா நின்னுடுச்சி. பல நண்பர்களுக்கும் தான்... ஆனாலும் இன்னமும் சில பேருக்கு இந்த வசதி வேலை செய்யுது.

நிதானமா, இவனுங்க யாருன்னு பார்த்தால், அந்த தனியார் நிறுவனம் Betamax. நம்ம கூகுல் ஆண்டவோர உதவியோட தேடிப் பார்த்தா பல விசயங்கள் வெளிவருது.

1) முகவரி:
Betamax GmbH & Co KG
Im Mediapark 8
50670 Köln
Germany

ஆனால், இங்க போய் பார்த்துட்டு நம்ம நண்பர்கள் அப்படி ஒரு நிறுவனமே இல்லைனு உறுதிப்படுத்திட்டாங்க !!!! :)

2) இவர்கள், கடனட்டையிலுள்ள ரகசிய குறியீட்டு எண்களைப் பயன்படுத்தி உபயோகிபாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கையாடல் செய்துள்ளதாக புகார் உள்ளதாம்.

இது போல ஏராளமான பாரட்டுப் பத்திரங்களை இங்கு சென்றால் நீங்கள் வாசிக்கலாம்.

http://forum.voxalot.com/voip-news/2768-betamax-accused-fraud-2.html

3) இந்த நல்லவனுங்க கொடுத்திருக்கும் தொலைபேசி எண்ணின் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ இவர்களை தொடர்புகொள்ள முடியவே முடியாது.
ஒருத்தர் எப்படி பொலம்பறாருன்னு பாருங்க.

We have already sent 100 Emails to BETAMAX n 100 calls to BETAMAX no one answer this is really cheating/fraud. I know my friend he also went to the main office of BETAMAX im Mediapark 8 Köln,but there is no Office of BETAMAX..

4) அதே சமயம் இந்த நிறுவனத்தார் இது போன்ற பல பெயரில் தங்களின் சேவை வசதியினை(!!!!!) அளிக்கின்றனர். அவற்றில் என்னால் கண்டுபிடிக்க இயன்றவற்றில் சில

1) LowRateVoip
2) justvoip
3) Freecall
4) VoipCheap
5) VoipStunt
6) VoipBuster
7) 12Voip
8) VoipWise
9) VoipRaider
10) VoipDiscount
11) Nonoh
12) Intervoip
13) Dialnow
14) Calleasy

இனியும் இருக்கலாம்.... தெரிந்தவர்கள் தயவு செய்து பகிர்ந்துகொள்ளவும்..

இது போன்ற voip சேவைகளை பயன்படுத்தும் முன் கவனமாக இருக்க சில யோசனைகள் (இனிமேல் நான் யோசனை சொல்லலாம் !!!)

1) உங்கள் கணக்கினை துவக்கும் முன் அந்த சேவை BETAMAX நிறுவனத்தாரால் வழங்கப்படவில்லையென உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2) நேரடியாக கடனட்டை தகவல்களை இவர்களிடம் தருவதிற்கு பதிலாக PayPal, UKash போன்ற அமைப்புகளின் மூலம் பணம் செலுத்த முயலுங்கள்.

3) இவர்களிடம் போய் சேரும் பணத்திற்கு ஒருவழிப்பாதை மட்டுமே தெரியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குறைந்த அளவே பணம் கட்டும் வாய்ப்பினை தேர்வு செய்யுங்கள். (என்னைப் போல் 10 €, 25 € கட்ட சோம்போறித்தனப் பட்டுக் கொண்டு 50, 100 € என கட்ட முயலவேண்டாம்) !!!! பிறகு புலம்புவதை தவிர்க்கலாம்.

நம்ம பதிவர்கள் சிலருக்கும் இந்த அனுபவம் இருக்குது (உபயம்: அடியேனே !!!!! )

16 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

கிரெடிட் கார்டு சீடிங்க் பண்ணராங்களா ? நான் அல்மோஸ்ட் ஒரு வருஷமா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். எந்த பிரச்னையும் வந்தது இல்ல. பட், இனிமே பில்லிங் செக் பண்ணனும். freecall & voipraider ரெண்டும் எனக்கு நல்லாவே வேல செய்யுது.

Thamiz Priyan சொன்னது…

நானும் freecall தான் பயன்படுத்தி வருகின்றேன்.,.எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் கிரெடிட் கார்டு எல்லாம் கிடையாதா? ஒன்லி வவுச்சர் ரீ சார்ஜ் தான்... :)

சென்ஷி சொன்னது…

என் போன்றவர்களுக்கு தேவையான நல்ல பதிவு பதி.. தகவலுக்கு நன்றிகள் பல.

நான் இன்னமும் இந்த முறையை உபயோகிக்க ஆரம்பிக்க வில்லை. ஆனால் குறைந்த செலவு என்று உபயோகிக்க சொல்லி எனது உறவினர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். தங்கள் பதிவு பார்த்து நிம்மதி ஆயிற்று. :-)

மணிநரேன் சொன்னது…

//என்னைப் போல் 10 €, 25 € கட்ட சோம்போறித்தனப் பட்டுக் கொண்டு 50, 100 € என கட்ட முயலவேண்டாம்//

அடப்பாவிபயலே... இப்படி எல்லாம் அதிகமாக கட்டி வெச்சியிருக்கியா? எப்படி பதி எப்படி இப்படியெல்லாம் செய்யனும்னு தோனுச்சு?

பதி சொன்னது…

வருகைக்கு நன்றி, மணிகண்டன், தமிழ்பிரியன், சென்ஷி மற்றும் மணிநரேன்.

//கிரெடிட் கார்டு சீடிங்க் பண்ணராங்களா ? நான் அல்மோஸ்ட் ஒரு வருஷமா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். எந்த பிரச்னையும் வந்தது இல்ல. பட், இனிமே பில்லிங் செக் பண்ணனும். freecall & voipraider ரெண்டும் எனக்கு நல்லாவே வேல செய்யுது.//

எனக்கு கிரெடி கார்ட் சீட்டிங் நடகலை.. கிரெடி சீட்டிங் தான்... நானும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக freecall & justvoip உபயோகிச்சுட்டு இருந்தேன்... இப்ப, நம்ம கணக்குல பணம் இருக்கும், நாட்களும் இருக்கும் ஆனால், வேலை மட்டும் செய்யாது...

//ஆனால் கிரெடிட் கார்டு எல்லாம் கிடையாதா? ஒன்லி வவுச்சர் ரீ சார்ஜ் தான்... :)//

தமிழ்பிரியன், இவர்களைப் போன்றவர்களிடம் கிரெடிட் கார்டு உபயோகிக்காமல் இருப்பதே நல்லது !!!

பதி சொன்னது…

//குறைந்த செலவு என்று உபயோகிக்க சொல்லி எனது உறவினர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். தங்கள் பதிவு பார்த்து நிம்மதி ஆயிற்று. :-)//

சென்ஷி, இது குறைந்த செலவினைத் தரக் கூடியது தான்... அதே சமயம், calling card களை ஒப்பிடும் போது எவ்வளவு செலவு பிடித்தாலும் இதையே உபயோகிப்போம் என்றே தோன்றும். ஏனெனில் உபயோகிக்க மிக எளிதானது.

உங்களைப் போன்றவர்களுக்காக தான்

//1) உங்கள் கணக்கினை துவக்கும் முன் அந்த சேவை BETAMAX நிறுவனத்தாரால் வழங்கப்படவில்லையென உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.//
என்று குறிப்பிட்டேன்... ஏனெனில் voip சேவையினை வழங்கும் பிற நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன...

நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்கள் ஏதேனும் அறியக் கிடைத்தால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன் !!!!

மாயவரத்தான் சொன்னது…

இப்போ இதே கம்பெனி actionvoip.com என்ற பினாமி பெயரில் ஊருக்கு 30 பைசா செலவில் பேச புதுசா சர்வீஸ் ஆரம்பிச்சிருக்காங்க. 5,10 யூரோ மட்டும் சார்ஜ் செஞ்சு ரிஸ்க் எடுக்க வேண்டியது தான்.

#BMN சொன்னது…

Try Globe7, it is realiable. I am using it for a long time.

மங்களூர் சிவா சொன்னது…

justvoip & nonoh.net இரண்டும் 6 மாதம் முன்புவரை எந்த பிரச்சனையும் எனக்கு இருக்கவில்லை.

அதற்கு பிறகு ரீசார்ஜ் செய்யவில்லை.

பெயரில்லா சொன்னது…

I have used justvoip and i never had any problem apart from the fair usage policy issues. Now i am using smartvoip(cheaper than justvoip). I thing this is also from the same company. but it is working fine at the moment.
Anyway it is good to aware of these things for the new users and also the alert for the existing users to use safe payment method.

பெயரில்லா சொன்னது…

Sorry not to mention in my previous comments. I rarly call india using these services, because i gave account detail to my relatives in India to call my Landline. So it is free.

பதி சொன்னது…

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மாயவரத்தான், மித்ரா குட்டி, மங்களூர் சிவா...

மாயவரத்தான்,
//இப்போ இதே கம்பெனி actionvoip.com என்ற பினாமி பெயரில் ஊருக்கு 30 பைசா செலவில் பேச புதுசா சர்வீஸ் ஆரம்பிச்சிருக்காங்க.//

ஆம். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.. சோம்பேறிகள், வலைப்பக்கத்தின் layout, software design எதையும் மாற்றவில்லை. நிறுவனப் பெயரையும், செயல்படும் ஊரையும் மாற்றியுள்ளனர் !!!

//5,10 யூரோ மட்டும் சார்ஜ் செஞ்சு ரிஸ்க் எடுக்க வேண்டியது தான்.//

அதே !!!! வேறு வழியில்லை....

மித்ரா குட்டி, Globe7 ன் மூலம், Phone to Phone வசதியை பயன்படுத்த முடியுமா?

பதி சொன்னது…

//அடப்பாவிபயலே... இப்படி எல்லாம் அதிகமாக கட்டி வெச்சியிருக்கியா? எப்படி பதி எப்படி இப்படியெல்லாம் செய்யனும்னு தோனுச்சு?//

மணி, regular bank transfer மூலமா பணம் அனுப்ப வேண்டியதா இருந்துச்சு.. அதுக்கு நான் ஒவ்வொரு முறையும் பேங்க்கு போக வேண்டியதா இருந்துச்சு !!!! அதுவுமில்லாம ஒரு வருசத்துக்கு மேல ஒழுங்க வேலையும் செஞ்சுச்சு !!!! :)

பெயரில்லா சொன்னது…

நான் கடந்த 2 வருடங்களாக உபயோகிக்கும் நம்பகத்தன்மையுள்ள நிறுவனம் www.bingotelecom.com. airtel,reliance இவைகளைவிட மிகவும் மலிவு.

-அன்புச்செல்வன்

பதி சொன்னது…

அன்புச்செல்வன் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. ஆனால், www.bingotelecom.com என்னும் தளத்தின் மூலம் அமெரிக்காவிலிருந்து மட்டுமே உலகின் வேறு பாகங்களுக்கு தொடர்பு கொள்ள இயலும்.

பதி சொன்னது…

//மாயவரத்தான்,

//இப்போ இதே கம்பெனி actionvoip.com என்ற பினாமி பெயரில் ஊருக்கு 30 பைசா செலவில் பேச புதுசா சர்வீஸ் ஆரம்பிச்சிருக்காங்க.//

ஆம். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.. சோம்பேறிகள், வலைப்பக்கத்தின் layout, software design எதையும் மாற்றவில்லை. நிறுவனப் பெயரையும், செயல்படும் ஊரையும் மாற்றியுள்ளனர் !!!

//5,10 யூரோ மட்டும் சார்ஜ் செஞ்சு ரிஸ்க் எடுக்க வேண்டியது தான்.//

அதே !!!! வேறு வழியில்லை....//


இப்போ இதுவும் வேலை செய்யுறது இல்லை.... :(