உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேசங்கள் தோரும் வீதிகளில் இறங்கி உணர்வுள்ள தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா அல்லது மூன்றாவது நாடொன்று வன்னியில் இறங்கி அங்கிருக்கும் மக்களை வெளியேற்றப் போவதாக கசிந்த செய்திகளை அடுத்து அது சம்பந்தமான பரப்புரைகளை இரண்டு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இன்னமும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருப்பதாகவே என்ன தோன்றுகின்றது.
1) இலங்கையில் சமத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான மக்கள் அமைப்பு People for Equality And Relief in Lanka - PEARL ஈழப் போராட்டம் தொடர்பாகவும் அங்கு ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் பரப்ப எடுத்து வரும் முயற்சிகளை அவர்களின் இணையபக்கத்தின் மூலம் அறியலாம். அமெரிக்கா வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்துவதிலும் இலங்கையின் போர்க் குற்றங்களை அமெரிக்க ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா பொது மக்களிடமும் அங்கு இருக்கும் ஊடகங்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், வன்னிப் பகுதியிலிருந்து மக்களை அமெரிக்கா தலைமையில் வெளியேற்றும் நடவடிக்கையை செயல் இழக்கச் செய்யமுடியும் என எண்ணும் இவர்கள் அது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட்'ல் 1/4 பக்க விளம்பரத்திற்கு தேவையான $13,000 தொகையினை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முயற்சிக்கு உதவ விரும்புவோர் அவர்களின் இணையபக்கத்திற்கு சென்று உதவ முயலுங்கள்.
2) அதே சமயம், ஒபாமாவுக்கான தமிழர்கள் - Tamils for Obama அமைப்பானது, வன்னியிலுள்ள தமிழர்களின் நிலை பற்றியும் அங்கு ஏற்படத்தப் பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு கருத்துக்கணிப்பினை நடத்துகின்றது. ஒருசமயம் வெளி நாட்டுப் படைகள் உள்நுழைந்தால் அவைகளின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் இது அமைந்துள்ளது.
தமிழில் : www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html
ஆங்கிலத்தில் : http://www.tamilsforobama.com/polling/poll.asp
இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்வது மிக எளிதான ஒன்று.
3) சர்வதேச நிதிக் கண்காணிப்பு அமைப்பிற்கு - International Monetary Fund இலங்கை அரசிற்கு கடனுதவி வழங்க இருப்பதை நிறுத்த வேண்டி ஒரு விண்ணப்பம்.
கடிதம் அனுப்ப இங்கே சொடுக்குங்கள்
அமெரிக்காவில் வாழ்பவர்கள் இணைப்பிற்கு இங்கே அழுத்துங்கள்!
பிற நாடுகளில் வாழ்பவர்கள் இங்கே அழுத்துங்கள்!
நண்பர்களே மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றிலும் உங்களாலான பங்களிப்பினை செய்யுங்கள்...
பின்குறிப்பு: இதுபோன்ற இணையபரப்புரைகளில் அதிக நம்பிக்கையின்றி இருந்தேன் (சமயத்தில் அதீத அவநம்பிக்கையுடன் இருந்தவர்களில் நானும் ஒருவன்). இன்போசிஸ் நிறுவனரின் முடிவில் மாற்றத்தினை கொண்டுவந்ததில் இது போன்ற இணைய பரப்புரையும் (வேறு காரணங்கள் இருப்பினும்) ஒரு முக்கிய காரணம் என எண்ணுகிறேன். ஆகையால், நீங்கள் இது போன்ற பரப்புரைகளில் பங்கெடுப்பதுடன், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுகின்றவர்களிடமும் அறியச் செய்யுங்கள்.
7 கருத்துகள்:
//This petition has been closed to new signatures at the author's request.//
Third one says like this.. :(
//Third one says like this.. :(//
என்ன கொடுமை சார் இது? இதை எதுக்க்கு மூடி வைச்சாங்க???
நல்லா இருக்கட்டும்...... :(
US support to IMF's Sri Lanka loan illegal – Prof. Boyle
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28765
அமெரிக்காவிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு கையளிக்கப்படவுள்ள மனு
http://www.petitiononline.com/JPN2/petition.html
உங்கள் முயற்சிகளுக்கு நன்றி பதி. அதேநேரம், இப்படியான கோரிக்கைகளில் போலியான மனுக்களுக்காகக் கையெழுத்து என்ற பெயரில் விபரங்கள் திரட்டப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான இணைப்புகள் குறித்தும் அவதானமாக இருக்கவும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருஷ்ணா...
//அதேநேரம், இப்படியான கோரிக்கைகளில் போலியான மனுக்களுக்காகக் கையெழுத்து என்ற பெயரில் விபரங்கள் திரட்டப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.//
நீங்கள் www.petitiononline.com தளத்தில் வரும் மனுக்களை பற்றிக் குறிப்பிடுகின்றீர்கள் என எண்ணுகிறேன்.
PEARL மற்றும் Tamils for Obama போன்ற அமைப்புக்களின் மனுக்கள் போலிகள் அல்ல....
உங்கள் முயற்சிகளுக்கு நன்றி பதி
கருத்துரையிடுக