சனி, 14 ஜனவரி, 2012

பனி விலக

நண்பர்களுக்கு வணக்கம்,

இங்கு நீண்டதொரு உறைநிலைக் காலத்தின் பின் வலைவீச :)

இந்தப் பக்கத்தில் எதையும் பதிவதை (எழுத்து எனச் சொல்ல ஏனோ மனசு வருவதில்லை) நிறுத்தி சற்றேறக்குறைய வருடம் இரண்டாகிவிட்டது. இன்னமும் பொழுது போக்கிற்கும், செய்தித் தொடர்புக்கும் இணையமே ஒரே வழியாக இருப்பினும், பதிவுகளில் பின்னூட்டம் இடக் கூட கடந்த ஒராண்டாக தோணவில்லை. ஆய்வுப் பணி, கட்டுரைகள் தயாரித்தல், ஆய்வறிக்கை சமர்பித்தல்னு நேரமேயில்லைனு கதைவிடலாம்னாலும், முகப்புத்தக நண்பர்கள் உண்மை அறிவார்கள் என்பதால் அதுவும் செல்லுபடியாகது.

சுத்தமா சரக்கே இல்லைனா நான் தான் என்னங்க செய்ய? :) அப்ப அப்ப எழுதலாம்னு வரும் யோசனையையும், Gmail draftல போட்டு வைச்சுட்டு மூஞ்சி புத்தகத்த மேஞ்சுட்டு ஒரு மாதிரியா வாழ்க்கை போகுது. இந்த இடைப்பட்ட காலகட்டத்துல முனைவர் பட்டம் வாங்குனதும், கண்டம் விட்டு கண்டம் தாவுனதும் தான் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள்.

சில முக்கிய கட்டுரைகளை தமிழாக்கம் செய்வதற்க்கும், Gmail draftல வருசக்கணக்குல வெட்டிய கிடக்குற சிலதுகளை வெளியே கொட்டவும் என மீண்டும் சில காலம் இங்க சுத்த நேரமும் விருப்பமும் கிடைக்கும்னு நம்புறேன். அதுக்கு அப்புறம் வழக்கம் போல பின்னூட்டம் போட உபயோகிக்க வேண்டியது தான். அதுவும் இல்லைனா, பதிவுகளை மூஞ்சிப் புத்தகத்துல பகிர்ந்துட்டு வழக்கம் போல பதிவுலகச் சேவையாற்றுவேன். என்னையும் மதிச்சு பதிவெழுத வரச் சொன்ன அண்ணாச்சிங்க யாரும் இப்ப பதிவெழுதுறது இல்லங்குறது ஒரு பெரிய மனக்குறை தான். அவங்க மேல இருக்குற மூடுபனியும் மெல்ல விலகும்னு நம்புறேன். விலகனும்.

ஏன்னா, பனி விலக சூரிய வெளிச்சம் கூட வேண்டாம், சூறக் காத்தே போதுங்குறது தான், இந்தக் குறுகிய கால Illinois வாழ்வு கத்துக் கொடுத்த முக்கியமான பாடம் :)

சரிங்க.. அனைவருக்கும் தமிழர் திருநாளம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
பதி

2 கருத்துகள்:

kaiyedu சொன்னது…

//முனைவர் பட்டம் வாங்குனதும், கண்டம் விட்டு கண்டம் தாவுனதும் தான் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள்.//
அட.. இதுதவிர வேற மாற்றம் இல்லையா...
உங்க வீட்ல ப்ளாக் பார்க்கறது இல்லையோ..

கொளுத்திப்போட்டாச்சு... எப்ப்பூ டி..

பதி சொன்னது…

அட ஆமாம் :)

திருமண அதிர்ச்சியில இருந்து இன்னமும் விலகலை, அதனால அந்த மாற்றம் இன்னமும் வாழ்க்கைல வரலை. எப்பூடி?

அவங்களுக்கு gchat, skype மற்றும் facebook மட்டும் தான் இணையம். அதனால கவலை இல்லை :)