வடகிழக்கு மாநில மக்களின் அவலத்திற்கு மற்றும் ஒரு சாட்சியம். கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பம் ஒன்றும் அதைத் தொடர்ந்து பொது மக்களின் போராட்டங்களும் உக்ருல் மாவட்டத்தில் (Ukhrul district) நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மைய அரசின் பிரதிநிதிகளுக்கு 6 நாகா அமைப்புகளின் கூட்டமைப்பு சுற்றறிக்கைக்கு அனுப்பிய தகவல் மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப் பெற்றது.
42 பழங்குடி இனங்களையும், சற்றேறக்குறைய 35 இலட்சதிற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள தேசிய இனமான நாகாவின் உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காவும் Nationalist Socialist Council of Nagaland (NSCN) இயக்கம் 1960களிலிருந்து போராடி வருகின்றது. இந்திய மைய அரசுடன், (NSCN) இயக்கத்திற்கு கடந்த 1 ஆகஸ்ட், 1997 லிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கின்றது. இருந்த போதிலும், அதன் அரசியல், மனித உரிமைப் பிரிவு பொருப்பாளார்களை பாதுகாப்பு படையினர் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 12ல், அசாம் ரைபிள் படைப்பிரிவினரால், பல பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் பிணமாக மீட்கப்பட்ட Salmon Hungyo என்னும் 28 வயதான வாலிபரின் உடலத்தின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
கடும் சித்திரவதைக்கு உள்ளான தடயங்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்படங்கள் கோரமானவை
கடும் சித்திரவதைக்கு உள்ளான தடயங்கள்
இந்த நிகழ்வைப் பற்றியோ, அல்லது மக்களின் போராட்டத்தைப் பற்றியோ ஏதேனும் செய்தி உண்டா என வெகுஜன ஊடகங்களில் கண்ணில் எண்ணை விட்டு தேடியும் ஒன்றையும் காணோம். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், இராணுவ அத்துமீறல்கள் தொடர்பாக பெரும்பான்மை ஊடகங்கள் கள்ள மெளனம் சாதித்து வருவதற்கு சற்றும் குறைந்தது அல்ல அவர்களின் வாசகர்களின் கள்ள மெளனம். இது போன்ற சட்டத்திற்கு புறம்பான அரச பயங்கரவாதத்தின் படுகொலைகளை கண்டும் காணாமல் போகும் போக்கே உள்ளது.
வாழ்க ஜனநாயகம்.
16 கருத்துகள்:
இந்த லட்சணத்துல நாம இலங்கைய குறை சொல்லிட்டு இருக்கோம் :(
என்ன தான் நடக்குது நாட்டுல!?
ஒரு முறை பாயின்ட் பிளாங்க் ரேஞ்சில் சுடப்பட்ட ஒரு முன்னாள் போராளியை டெஹல்கா காட்டியது அண்ணே , முக்கால்வாசி பத்திரிக்கைகாரகள் கார்பரேட் கைகூலிகளே
இந்திய தேசியத்தின் மக்கள் போராட்டங்களுக்கு எதிரான மிகமோசமான வன்முறையும், பயங்கரமும் எந்தவிதத்திலும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஸ், டிக் செனாய் உத்தரவிட்டிருந்த சித்திரவதைகளுக்கு குறைந்ததல்ல. அதைவிடவும் கொடூரமாக காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்தில் படுகொலைகளை செய்கின்றன. இந்திய படைகளில் இதற்கான தேர்ச்சி மிக அதிகமாகவே இருக்கிறது.
முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியாகிய கோரமான, கொடூடமான படுகொலைகளின் படங்களும் இந்த படங்களும் அரச பயங்கரவாதத்தின் சாட்சிகள். தேசவெறி, தேசப்பற்று, தேசியம், இறையாண்மை எல்லாம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான கொலைவெறி ஆயுதங்களாக பாவிக்கப்படுகின்றன. அரூபமான இந்த ஆயுதங்களே மிகக் கொடூரமானவை!
இந்திய பேரரசு வளர்கிறது. பேரரசுகளுக்குரிய பயங்கரவாத செயல்களுடன்.
If govt can't have monopoly over the legitimate use of violence..Then it obviously means there is no state exist in that part of the world. which is what these Indian union leeches are proving it time and again by killing innocent souls :X
வருகைக்கு நன்றி ILA,
//இந்த லட்சணத்துல நாம இலங்கைய குறை சொல்லிட்டு இருக்கோம் :(//
அவங்களுக்கு பயிற்சி கொடுத்தவனுங்களே இவங்க தானே???
வருகைக்கு நன்றி வால்பையன்,
//என்ன தான் நடக்குது நாட்டுல!?//
மக்களாட்சி பொங்கி வழிகின்றது. இதை சுட்டிக் காட்டுபவர்கள் தேசவிரோதிகள். இது தான் நடக்குதுங்க.
வருகைக்கு நன்றி பிரகாஷ்.
//ஒரு முறை பாயின்ட் பிளாங்க் ரேஞ்சில் சுடப்பட்ட ஒரு முன்னாள் போராளியை டெஹல்கா காட்டியது//
ஆம். அதனை எனது முந்தைய இடுகையினில் குறிப்பிட்டிருந்தேன்.
http://pathipakkam.blogspot.com/2009/08/blog-post.html
//அண்ணே , முக்கால்வாசி பத்திரிக்கைகாரகள் கார்பரேட் கைகூலிகளே//
மீதி இருப்பவர்கள், சிங்கள ரத்னாக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு..
//இந்திய படைகளில் இதற்கான தேர்ச்சி மிக அதிகமாகவே இருக்கிறது.//
ஆம். ஆனால், இது போன்ற நீதிக்கு புறம்பான கொலைகளை, மனித உரிமை மீறல்களை வெகுஜன ஊடகங்கள் தேசபக்தி என்னும் பெயரால் கண்மூடித் தனமாக ஆதரிக்கும் ஆபத்தான போக்கு நீடிக்கும் வரை இவர்களது எந்தவிதமான செயற்பாடுகளும் பெரும்பாலான மக்களைச் சென்றடையாது. அப்படி இருக்கையில், இவர்கள் எவ்வாறு போராடி சம உரிமைகள் பெறப் போகின்றனரோ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபாலன்...
மணிப்பூர் சம்பவங்களைப் பற்றிய விரிவானதொரு பதிவு
துப்பாக்கிச் சனியன்களுக்கு எதிராக மேலாடைத்துணி -மணிப்பூரின் வீர மகளிர் http://inioru.com/?p=4886
கொடுமை.. கொடுமை..! என்ன தேசம் இது..?
மக்களின் பிரச்சினைகளை செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க விரும்பாமல் அடக்குமுறை கொண்டு அடக்க நினைப்பதா ஜனநாயகம்..?
வெட்கக்கேடு..!
வாங்க உண்மைத் தமிழன்,
//மக்களின் பிரச்சினைகளை செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க விரும்பாமல் அடக்குமுறை கொண்டு அடக்க நினைப்பதா ஜனநாயகம்..?//
மக்களின் பிரச்சனையை பேசித் தீர்க்க விரும்பாமல் துப்பாக்கி கொண்டு அடக்கிக் கொண்டுள்ளனர் கடந்த 50 ஆண்டு காலமாக.
இதற்கு வெகுஜன ஊடகங்களின் ஆதரவு வேறு.
தாங்க முடியாத கொடுமைகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்திரவதனா அம்மா... நான் முதன் முதலில் தமிழில் படித்த வலைப்பூ உங்களது தான்...
என்ன செய்வது, இது போன்ற தாங்க முடியாத கொடுமைகளை பொதுமக்களுக்கு இழைத்துவிட்டு, "காமன் மேன்" சிந்தனைகளை கொண்டு தீவிரவாதத்தை களைவதைப் பற்றி எங்களூரில் சிலர் படம் எடுத்து பாடம் நடத்துகின்றனர்.
காட்டுமிராண்டித்தனம் ...!
கருத்துரையிடுக