ஞாயிறு, 1 மார்ச், 2009

அடுத்த ஆஸ்கர் பரிசு ???



Slumdog Millionaire படத்தைப் பற்றியும் அதற்கான ஆஸ்கார் விருதுகளையும் பாராட்டி சீராட்டி, திட்டி, உள்குத்து, வெளிக்குத்து வைத்து ஏராளமான பதிவுகள் வந்துவிட்டதால் அதனைப் பற்றி நான் சொல்ல எதுவும் இல்லை.

படத்தின் கதைக் களமும் (சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைப் பற்றி) அதற்கான திரைக் கதை அமைப்பும் அருமை. பின்னனி இசையைப் பற்றி என்ன சொல்ல?? அது தான் உலகமே கொண்டாடுகிறதே.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்... !!!!!!!!!!      :)



இங்கு எழுத வந்தது படக் கதை, கதைக் களம், இயக்குனர் யார், அவரின் பின்புலமென்ன, ரகுமானின் திறமை பற்றியல்ல.. சில நாட்களுக்கு முன்னால் கீழ்கண்ட செய்தியைப் பார்த்தவுடன் தான், இந்த முறை ஆஸ்காருக்கு யார் காரணம் என்னும் அதிபயங்கர உண்மை புலப்பட்டது. அதே சமயம் அடுத்து வருங்காலங்களிலும் ஏராளமான ஆஸ்கார் பரிசுகள் தொடர்ந்து இந்தியாவிற்கு கிடைக்கும் சாத்தியங்களும் தெரிகின்றது.

"
ரஹ்மானுக்கு ஆஸ்கர்: உரிமை கொண்டாடும் காங்!"

இந்த உண்மை புரியாமல் ரகுமானையும் மற்றவர்களையும் கொண்டாடும் அரை வேக்காட்டுத்தனத்தை சு'தந்திர' இந்தியாவின் அரசபரம்பரையினர் தயைகூர்ந்து மன்னிப்பார்களாக.... வெள்ளைக்காரனிடமிருந்து 61 1/2 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்ற இந்தியா என்னும் அமைப்பை 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸை தவிர இது போன்ற கதைக் களத்திற்கும் அதனால் வந்த விருதுகளுக்கும் யார் உரிமை கொண்டாட முடியும்? அதுவும் இந்தியாவின் வியாபரத் தலைநகரமான மும்பைச் சேரியில் இதுபோன்று மலக் குழிகளை விட்டுவைக்காமலும், மலத்தில் விழுந்து எழுந்தாலும் சினிமா நடிகர்களை பார்த்தால் மோட்சம் வரும் என என்னும் அளவிற்கு சமுதாய/கல்வி கட்டமைப்பை ஏற்படுத்தமலும் இருந்து இருந்தால், ஒரு வெள்ளைக்கார பயலால் இப்படி முகத்தில் அறையும் அளவிற்கு நிதர்சனத்துடன் ஒரு படம் இயக்கி இருக்க முடியுமா?

மும்பை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்கவது தாங்கள் விளிம்பு நிலையில் உள்ளோம் என்றாவது விளங்கும். ஏனெனில் ஒப்பிட்டு பார்க்கவாவது வேறு நிலையில் மனித வாழ்க்கை உள்ளது. இன்னமும் அடிப்படை வசதிகள் கூட சென்றடையாத வடகிழக்கு மாநிலங்களிலும், அங்கு இவர்களின் இராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும், இராணுவ அடக்குமுறையின் கீழேயே 60 ஆண்டுகளையும் கழித்த காஸ்மீரிலும், இவர்களின் போலி தேசியவியாதிக் கொள்கையினால் நாயின் கீழாக சுட்டுக் கொல்லப்பட்ட 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களிலிருந்தும் இன்னமும் எத்தனை லட்சம் Slumdog Millionaire போன்ற கதைகளை உருவாக்குவது? அது எவ்வளவு நிதர்சனசமாக இருக்கும்???

இந்த ஆஸ்காரினாலும் படக் கதையின் களத்தினாலும் உந்தப்பட்ட வேறு யாரேனும் ஒரு வெள்ளைக்காரர் மேற் சொன்ன ஒன்றின் ஏதேனும் ஒரு கதையை முயற்சித்தால் அதற்கு ஆஸ்கார் விருது வராதா?? இது போன்ற லட்சக் கணக்கான கதைக் களங்களை இவர்களை தவிர வேறு யாரால் இயல்பாய் உருவாக்க முடிந்திருக்கும்?

ஆகையால், இந்த ஆஸ்கார்கள் மட்டுமல்ல, இனிவருங்காலங்களில் வரும் ஆஸ்கார், பென்ஸ்கார் மற்றும் பியட்கார் விருதுகளுக்கும் காங்கிரஸ் என்னும் தேசிய வியாதி மட்டுமே உரிமை கொண்டாட தகுதியுள்ளது. குஜராத் கதைய எடுக்குறதுனா மட்டும் மனித வெட்டி கூட்டங்க கிட்ட சொல்லிடுங்க, இல்லைனா குரங்கு சேனைங்க உண்டு இல்லைனு பண்ணிடும்...

அதே சமயம், இனி மேல் மூலக்கதைக்காக தரப்படும் விருதை காங்கிரஸ் கட்சிக்கே (மனித வெட்டி கதைகளுக்கு காவி குரங்கு சேனைங்களுக்கு) வழங்க வேண்டுமென கோரிக்கைவைக்கும் தீர்மானத்தை இனமான தமிழக காங்கிரஸின் ஏதோ ஒரு கோஸ்டி தலைவர் முன்மொழிந்துள்ளதை இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்...

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது சம்பந்தமான BBC யின் கட்டுரை ஒன்று

The real Slumdogs of India

http://news.bbc.co.uk/2/hi/business/7899924.stm

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

பதி சொன்னது…

என்ன கொடூரம் சார் இது??? எனக்கு ஏன் இப்படி அனானி இல்லாட்டி புதுசு புதுசா தொடங்குற aggregators'ல இருந்தே பின்னூட்டம் போட்டுறாங்க??

கிருஷ்ணா சொன்னது…

//அதே சமயம், இனி மேல் மூலக்கதைக்காக தரப்படும் விருதை காங்கிரஸ் கட்சிக்கே (மனித வெட்டி கதைகளுக்கு காவி குரங்கு சேனைங்களுக்கு) வழங்க வேண்டுமென கோரிக்கைவைக்கும் தீர்மானத்தை இனமான தமிழக காங்கிரஸின் ஏதோ ஒரு கோஸ்டி தலைவர் முன்மொழிந்துள்ளதை இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்...//

பின்னே! இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளல்லவா? (எவையென்றெல்லாம் கேட்கக்கூடாது.)