நண்பர்கள் சிலர் சொன்னதாலும் பதிவுலகில் யாரோ எழுதியிருந்ததாலும், சில தனியார் நிறுவனங்களின் voip வசதியை பயன்படுத்த முடிவெடுத்தேன். Freecall என்னும் சேவை வசதி சற்றே தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதாக கருதி அதில் ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் நம்ம ஊருக்கும், வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்களுடனும் மணிக்கணக்கில் பேசிவந்தேன்.
இந்த சேவை ஒழுங்காக இயங்கும் பொழுது, இச்சேவையை வழங்கும் நிறுவனத்தைப் பற்றியோ அல்லது அவர்களின் நம்பகத்தன்மை பற்றியோ சந்தேகமே வந்ததில்லை. (எங்க, நமக்கு தான் மணிக்கணக்குல போன் பேச இல்லாட்டி பிளாக், ஓர்குட்'ல ஆராய்ச்சி பண்ணவே நேரம் இல்லையே !!!)
ஒரு சில மாதங்களுக்கு முன்பு கடன் அட்டை வழியாக பணம் செலுத்தும் வசதி நின்றபொழுதும் எதுவும் உறைக்கவில்லை (போன் பேசுற மப்பு !!!). வழக்கமான முறையில் வங்கி வழியாக பணம் செலுத்தும் முறையில் பணத்தை அனுப்பி விட்டு, இதே முறையை பின்பற்றும் படி பல நண்பர்களும் பரிந்துரைத்தேன். ஒரு இனிய மாலைப் பொழுதில் வேலை செய்யுறது சுத்தமா நின்னுடுச்சி. பல நண்பர்களுக்கும் தான்... ஆனாலும் இன்னமும் சில பேருக்கு இந்த வசதி வேலை செய்யுது.
நிதானமா, இவனுங்க யாருன்னு பார்த்தால், அந்த தனியார் நிறுவனம் Betamax. நம்ம கூகுல் ஆண்டவோர உதவியோட தேடிப் பார்த்தா பல விசயங்கள் வெளிவருது.
1) முகவரி:
Betamax GmbH & Co KG
Im Mediapark 8
50670 Köln
Germany
2) இவர்கள், கடனட்டையிலுள்ள ரகசிய குறியீட்டு எண்களைப் பயன்படுத்தி உபயோகிபாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கையாடல் செய்துள்ளதாக புகார் உள்ளதாம்.
http://forum.voxalot.com/voip-news/2768-betamax-accused-fraud-2.html
ஒருத்தர் எப்படி பொலம்பறாருன்னு பாருங்க.
4) அதே சமயம் இந்த நிறுவனத்தார் இது போன்ற பல பெயரில் தங்களின் சேவை வசதியினை(!!!!!) அளிக்கின்றனர். அவற்றில் என்னால் கண்டுபிடிக்க இயன்றவற்றில் சில
1) LowRateVoip
2) justvoip
3) Freecall
4) VoipCheap
5) VoipStunt
6) VoipBuster
7) 12Voip
8) VoipWise
9) VoipRaider
10) VoipDiscount
11) Nonoh
12) Intervoip
13) Dialnow
14) Calleasy
இனியும் இருக்கலாம்.... தெரிந்தவர்கள் தயவு செய்து பகிர்ந்துகொள்ளவும்..
1) உங்கள் கணக்கினை துவக்கும் முன் அந்த சேவை BETAMAX நிறுவனத்தாரால் வழங்கப்படவில்லையென உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2) நேரடியாக கடனட்டை தகவல்களை இவர்களிடம் தருவதிற்கு பதிலாக PayPal, UKash போன்ற அமைப்புகளின் மூலம் பணம் செலுத்த முயலுங்கள்.
3) இவர்களிடம் போய் சேரும் பணத்திற்கு ஒருவழிப்பாதை மட்டுமே தெரியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குறைந்த அளவே பணம் கட்டும் வாய்ப்பினை தேர்வு செய்யுங்கள். (என்னைப் போல் 10 €, 25 € கட்ட சோம்போறித்தனப் பட்டுக் கொண்டு 50, 100 € என கட்ட முயலவேண்டாம்) !!!! பிறகு புலம்புவதை தவிர்க்கலாம்.
நம்ம பதிவர்கள் சிலருக்கும் இந்த அனுபவம் இருக்குது (உபயம்: அடியேனே !!!!! )