வியாழன், 25 ஜூன், 2009

ஈழமக்களின் இன்றைய அவலநிலை குறித்து விவாதிக்க ஒரு கலந்துரையாடல் 28/06/09

ஈழப் பிரச்சனையின் தற்போதைய நிலவரம் குறித்தும், மக்களின் அவலநிலையை விளக்கியும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு IT Professionals என்னும் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் தான், இந்த மாதம் 7ம் நாள் நடந்த "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்வையும் நடத்தியிருந்தது நியாபகம் இருக்கும்.

நாள்: 28/06/09

நேரம்: மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை

இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை



கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு

விடுதலை ராசேந்திரன் - ஈழப் போரட்டத்தின் வரலாறும் அதன் எதிர்காலமும்
தந்தை ஜெகத் கஸ்பர் - வதைமுகாம்களில் அடைபட்டுள்ள மக்களின் இன்றைய அவலநிலை
பூங்குழலி - சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்
அருள் ஜார்ஜ்(PUCL) - சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்கள்

இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக சில குறும்படங்களை ஒளிபரப்பவும், புகைப்படக் கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்து முகாம்களிலிருக்கும் சில ஈழத்தமிழர்களும், சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: பல்வேறு பணிச்சூழல், தனிப்பட்ட வேலைகளின் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களினால் சென்றமுறையைப் போல் முன்கூட்டியே இந்த நிகழ்வை பலருக்கும் தெரியப்படுத்த இயலவில்லை என அறிய நேர்ந்தது. ஆகையால், சென்ற முறை நீதிக்காண அமைதிப் பேரணி நிகழ்விற்கு பரப்புரை செய்ததைப் போல், இந்த முறையும் இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

5 கருத்துகள்:

செல்வநாயகி சொன்னது…

நல்லதும், முக்கியமானதுமான நிகழ்வு பதி. இதுபோன்ற நிகழ்வுகளும், அவற்றின் உள்ளடக்கங்களும் தலைநகரத்தோடு நின்றுபோய்விடாமல் தமிழகத்தின் பல இடங்களிலும் எடுத்துச்செல்லப்படவேண்டும். அரசியல்வாதிகளல்லாதோரால் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வுகளில் அவற்றின் தீவிரத்தன்மை சார்ந்து மக்களுக்குப் புரியவைத்து அவர்களையும் பங்கெடுக்க வைக்கமுடியும்.

பதி சொன்னது…

வாருங்கள் செல்வநாயகி...

உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//அரசியல்வாதிகளல்லாதோரால் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வுகளில் அவற்றின் தீவிரத்தன்மை சார்ந்து மக்களுக்குப் புரியவைத்து அவர்களையும் பங்கெடுக்க வைக்கமுடியும்.//

ஆம். இதற்கு சென்ற முறை நடைபெற்ற பேரணிக்கு வந்திருந்த பெருமளவிலான இளைய சமுதாயமே சாட்சி.

கோவையிலும் இது போன்ற கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அது பற்றிய தகவல் தெரிந்தவுடன் இங்கு பதிகின்றேன்.

Iniyan சொன்னது…

Its a good initiation. I hope many people will participate!

பதி சொன்னது…

நடைபெற்ற நிகழ்வின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பெறலாம்

http://tamilnational.com/indian-news/tamil-nadu/1403-conference-on-current-situation-of-tamils-in-sl-.html

பதி சொன்னது…

//Its a good initiation. I hope many people will participate!//

ஆம் இனியன். இது போன்ற பல நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.