போர் நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர் நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

மழை விட்டும் தூவானம் தொடர்வது....

நேற்று வெற்றிகரமாக ஜெயவர்த்தனே சமாதியில் நடந்து முடிந்த ராஜபக்சே உண்ணாவிரதத்தை உணர்ச்சிகரமாக வெளியிட்டிருந்தோம் . இன்று அதன் தொடர்ச்சி..

1/4 மணி நேர உண்ணாவிரதத்தில் முக்கால் வாசி உலகை மிரட்டிய ராஜபக்சே உண்ணாவிரத நோக்கம் நிறைவேறியதாக தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் BBC மற்றும் இலங்கை செய்தி நிறுவனங்கள் வேறு மாதிரி பொய் தகவல்கள் வெளியிட்டு ராஜபக்சே மேலுள்ள வெறுப்பை தீர்த்துக் கொண்டன..

அதே சமயம், திடீர் தமிழாதரவாளரான ரணிலின் மேடைப் பேச்சு அட்டகாசங்களும் எல்லை மீறி வருவதாக தமிழக செய்திகள் கட்டியம் கூறுகின்றன..

இந்நிலையில், நேற்றைய தனது கொடூர உண்ணாவிரதம் ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி ஈனத் தலைவர் தனது வழக்கமான பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்...

அதில், "எனது உண்ணாவிரதப் போராட்டம், எனக்கு முழு திருப்தியை அளித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்..

அதே சமயம், மழை விட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். அதைப் போலத்தான் இலங்கையில் இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும் எனவும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

இதுவரை இலங்கை இராணுவப் பேச்சாளர், இராணுவத் தளபதி, கோத்தபாய கூட தெரிவிக்காத கருத்தை ராஜபக்சே தெரிவித்துள்ளதால் அவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக நமது கொழும்பு நிருபர் தெரிவிக்கின்றார்..

இதே பாணியில் போனால், அங்கு இருக்கும் சொற்ப ஜனங்களும் சாக மறுப்பதினால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அவர்கள் திருப்பி தாக்காமல் அமைதியாக சாகும் பட்சத்தில் விமான பீரங்கிக் குண்டு சேதாரம் ஏற்படாது என ஈனத் தலைவரிடமிருந்து அடுத்த அறிக்கை வந்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை..

இந்த நிலையில், ராஜபக்சே மற்றும் ரணிலின் அறிக்கை அட்டகாசம் தாங்காத மக்கள் தேர்தல் தேதியை முன்கூட்டியே வைக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை இன்று முதல் முற்றுகைப் போரட்டத்தின் மூலம் முடக்க போவதாக வந்துள்ள செய்திகளையடுத்து அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

ராஜபக்சே பக்தர்களிடம் ஒரு சின்ன சந்தேகம்... நீங்க எப்படியும் இதுக்கு ஒரு சப்பக்கட்டு கட்டி பதிவு போடப் போறீங்க.. அதைவிடுங்க.. இப்படியே போனால், உங்க ஈனத் தலைவர், அங்க போட்ட குண்டுகளினால் வந்த பொருளாதர இழப்பிற்கு ஈழத்தமிழர்கள் நஸ்ட ஈடு கொடுக்கனும்னு ஒரு அறிக்கை விட்டால் ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னும் இல்லை.. அதுக்கு தயார ஒரு பதிவு ரெடி பண்ணி draft'ல போட்டு வைச்சு இருக்கீங்களா?

ஏய்.. சைலன்ஸ்.. பேசிகிட்டு இருக்கோம்ல.. யாரு அது, தமிழ், இனமானம், மனிதம், உரிமை, திராவிடம்னு கூச்சல் போட்டுகிட்டு...