அகிம்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகிம்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஏப்ரல், 2009

"இந்தி"யர் என்று பெருமிதம் கொள்வோம்....

"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்
சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்று
அகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்
காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்து
ஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில்

மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்.....